SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுதானிய நட்ஸ் கொழுக்கட்டை

2017-08-09@ 12:23:49

என்னென்ன தேவை?

கம்பு, சாமை, வரகு, தினை, குதிரைவாலி, வெள்ளை நிறத்தில் உள்ள சின்ன சோளம் யாவும் கலந்து ரவையாக உடைத்தது - 2 கப்,
பாதாம், முந்திரி, பிஸ்தா - தலா 10,
ஏலக்காய்த்தூள் - சிறிது,
உலர்ந்த அத்திப்பழம் - 2,
பேரீச்சம்பழம் - 2,
வெல்லம் - 1 கப்,
நெய் - 1 டீஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை.


எப்படிச் செய்வது?

சிறுதானியங்கள் அனைத்தையும் லேசாக வறுத்து உலர்த்தி ரவை பதத்திற்கு அரைத்து, உலர்ந்த பழங்களையும் பொடித்து கலந்து வைக்கவும். நட்ஸ் வகைகளை நறுக்கி சிறிது நெய்யில் வறுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து, 1 டீஸ்பூன் நெய், உப்பு, கலந்த மாவு, நட்ஸ் வகைகளை கொட்டி கலந்து வேகவைத்து எடுக்கவும். மற்றொரு பாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் 1/2 கப் சேர்த்து பாகு பதத்திற்கு காய்ச்சி ஏலக்காய்த்தூள், வெந்த ரவை கலவையை சேர்த்து கிளறவும். இந்த கலவை சுருண்டு வந்ததும், உடனே இறக்கி ஆறவிட்டு, நீளவாக்கில் பிடிக்கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுத்து அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: விரும்பினால் நட்ஸை குறைத்துக் கொண்டு தேங்காயை பல் பல்லாக போடலாம்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்