SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புருஸில்ஸ் பிரக்கோலி சாத்தே மிக்ஸ்

2017-07-27@ 13:15:06

என்னென்ன தேவை?

பிரக்கோலி - 1,
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
நறுக்கிய புருஸில்ஸ் - 250 கிராம்,
உப்பு - தேவைக்கு,
நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்,
நறுக்கிய மல்லித்தழை - சிறிது,
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

பிரக்கோலியை கொதிக்கும் தண்ணீரில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தவாவில் வெண்ணெயை போட்டு உருகியதும் புரோக்கோலி, புருஸில்ஸை வதக்கி, பூண்டைச் சேர்த்து வதக்கவும். பின் உப்பு, மிளகுத்தூள் போட்டு தண்ணீர் சேர்க்காமல் வதக்கி இறக்கவும். மல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: புரோக்கோலிக்குப் பதில் காலிஃப்ளவர் மற்றும் புருஸிலுக்குப் பதில் முட்டைக்கோஸை சேர்த்தும் சாத்தே மிக்ஸை செய்யலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

  • victoriafallsdry2019

    தென் ஆப்ரிக்காவில் நிலவும் வறட்சி: விக்டோரியா அருவியில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்த தண்ணீர் வரத்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்