SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தம்ரூட் செய்முறை

2017-07-14@ 14:42:44

என்னென்ன தேவை?

ரவை - 1 கிலோ,
முட்டை - 12,
சர்க்கரை - 1 கிலோ,
நெய்  1/2 கிலோ,
பால் - 1 லிட்டர்,
கன்டென்ஸ்டு மில்க் - 1/2 டின் (விரும்பினால்),
முந்திரி - 100 கிராம்.


எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் ரவையை பொன்னிறமாக வறுக்கவும். மற்றொரு பாத்திரத்தில் பாலையும் நன்றாக சுண்டக் காய்ச்சிக் கொள்ளவும். சர்க்கரையை மிக்சியில் நைசாக அரைத்துக் ெகாள்ளவும். கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை சேர்த்து ஹேண்ட் பீட்டர் கொண்டு நன்கு நுரை வரும்வரை அடித்துக் கொள்ளவும். இத்துடன் பொடித்த சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக அடிக்க வேண்டும்.

இரண்டும் நன்றாகச் சேர்ந்து கலவையானதும், வறுத்த ரவை மற்றும் காய்ச்சிய பால் இவைகளை சேர்த்து, மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அல்வா பதத்திற்குக் கிண்டுவது போல் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். இந்தக் கலவை நுரை பொங்கும்போது, ஓரங்களில் சிறிது சிறிதாக நெய்யை சேர்த்து கிளறவும். வறுத்த முந்திரிப்பருப்பை கடைசியாக  சேர்க்கவும்.

மணல் நிறைக்கப்பட்ட ஓர் இரும்பு தவாவை அடுப்பில் ஏற்றி மண் நன்றாக சூடு ஏறியதும் ஏற்கனவே கிளறி வைத்துள்ள தம் ரூட் கலவை உள்ள பாத்திரத்தை மண் சூடாக்கப்பட்ட தவாவின் மேல் வைத்து ஒரு மூடியால் நன்றாக மூடிவிட்ட பிறகு மூடியின் மேல் நெருப்பு கங்குகளைப் போட்டு பிரியாணிக்கு தம் கட்டுவதுபோல் தம் கட்ட வேண்டும். அப்போது கீழே எரியும் நெருப்பானது மிதமான தீயில் இருக்க வேண்டும். பத்து நிமிடம் கழித்து ஒரு கத்தியை கலவைக்குள் விட்டுப் பார்த்தால் அது கத்தியில் ஒட்டாமல் வந்தால் கேக் நன்றாக வெந்து ரெடியாகிவிட்டது என்று அர்த்தம். பாத்திரத்தை கீழே இறக்கி மற்றொரு தட்டில் இந்தக் கேக்கை தட்டி விருப்பமான வடிவத்தில் வெட்டி உண்ணலாம். இதுதான் தம்ரூட் கேக் செய்முறை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்