SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஷீர் குர்மா

2017-06-12@ 15:13:42

என்னென்ன தேவை?

சேமியா - 200 கிராம்
பால் - 2 லிட்டர்
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய் - 6
நெய் - அரை கப்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
பேரீச்சைப்பழம் - 6

தாளிக்க...

பாதாம் பருப்பு  - ஒரு டேபிள்ஸ்பூன் (தோல் நீக்கி, நறுக்கியது)
பிஸ்தா பருப்பு  - ஒரு டேபிள்ஸ்பூன் (தோல் நீக்கி, நறுக்கியது)
வெள்ளரி விதை - ஒரு டேபிள்ஸ்பூன்


எப்படிச் செய்வது?

கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை எடுத்து சூடான பின், பாதாம்பருப்பு, பிஸ்தா பருப்பு, வெள்ளரி விதை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும். பின்னர் அதே கடாயில் மீதமுள்ள நெய்யைச் சூடாக்கி, அதில் சேமியாவைச் சேர்த்து கருகாமல் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் பால், குங்குமப்பூ, தூலாக்கிய ஏலக்காய் எடுத்து பாதியாகச் சுண்டும் வரை காய்ச்சவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து, நன்றாகக் கரையவிட்டு, வறுத்த சேமியா மற்றும் பேரீச்சைப் பழம் சேர்த்து 20 நிமிடங்கள் வேகவிடவும். கடைசியாக இறக்கி, வறுத்த பாதாம் பருப்பு, பிஸ்தா, வெள்ளரி விதையை மேலே தூவிப் பரிமாறவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-04-2018

    26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • bangladesh_accd1

    1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு

  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்