SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காய்கறி தோல் சூப்

2017-06-08@ 14:11:45

என்னென்ன தேவை?

வெண்டைக்காய் காம்பு பகுதி,
காலிஃப்ளவர் இலையின் தண்டு பகுதி, கோஸ் தண்டு பகுதி, பரங்கிக்காய் தோல், பீட்ரூட் தோல், வாழைக்காய் தோல், வாழைத்தண்டு தோல் பாகம் அனைத்தும் சேர்த்து - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
நெய் - 1/4 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
வெந்தயம் - 5.


எப்படிச் செய்வது?

காய்கறிகளின் தோல்களை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம் போட்டு பொரிந்ததும், இஞ்சிபூண்டு விழுது போட்டு பச்சைவாசனை போகும் வரை வதக்கவும். பின் மிளகுத்தூள், சீரகத்தூள், வேகவைத்த காயின் தோல்களையும்  தண்ணீரோடு சேர்த்து கடாயில் ஊற்றவும். உப்பு சேர்த்து கொதித்ததும் இறக்கி, வடித்து மேேல நெய் விட்டு பரிமாறவும். குறிப்பு: இஞ்சிபூண்டு விழுதுக்கு பதில் இஞ்சி 1 துண்டு, முழு பூண்டு 8 பல் அப்படியே போடலாம். எல்லா காய்களின் தோல் பகுதியை நன்றாக பிரஷ் கொண்டு தேய்த்து கழுவி உபயோகிக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்