SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெந்தய குழம்பு

2017-06-06@ 14:42:43

என்னென்ன தேவை?

சுண்டைக்காய் வற்றல் - 3 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 15,
தனியா - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 7 அல்லது 8,
வெந்தயம் - 3 டீஸ்பூன்,
புளி - ஒரு எலுமிச்சை அளவு,
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,
பெரிய தக்காளி - 1,
நல்லெண்ணெய் - 6 டீஸ்பூன்,
மிளகு - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது),
வெல்லம் - சிறிது,
கறிவேப்பிலை - ஒரு கொத்து.


எப்படிச் செய்வது?

கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, 2 டீஸ்பூன் வெந்தயம் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சியில் தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் மீதியுள்ள நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, மீதியுள்ள வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், சுண்டைக்காய் வற்றலைப் போட்டு பொரித்துக் கொள்ளவும்.

இத்துடன் சின்ன வெங்காயத்தையும், தக்காளியையும் நன்றாகக் குழைய வதக்கி, அரைத்த மசாலாவையும் சேர்த்துக் கிளறவும். உப்பு, புளிக்கரைசலை ஊற்றி நன்றாகக் கொதிக்க விடவும். சிறிது வெல்லம் சேர்த்து இறக்கி, சாதத்தோடு பரிமாறவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • porattam_arasu_11

    அரசு மருத்துவர்களுக்கான நேர்முக கலந்தாய்வை ரத்து செய்ய கோரி பட்டை நாமம் அணிந்து, ஆணி மேல் நடக்கும் நூதன போராட்டம்

  • afghan_payirr

    சென்னை பரங்கிமலையில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி

  • therthal_pracha

    நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி இளைஞர்கள் ஆர்கேநகர் தொகுதியில் வீடுவீடாக சென்று தீவிர பிரச்சாரம்

  • fusion_complexxx

    ஃப்யூஷன் கருத்தாக்கத்தின் மூலம் அதிகளவு மின்சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய உலகின் சிக்கலான இயந்திரம் : பிரான்ஸில் கட்டமைப்பு

  • idaitherthal_11

    சூடு பிடிக்கிறது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : வேட்பாளர்கள் மதுசூதனன், மருது கணேஷ், டிடிவி தினகரன் தீவிர வாக்கு சேகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்