SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடைமிளகாய் பனீர் ஃப்ரை

2017-06-05@ 13:58:32

என்னென்ன தேவை?

சதுரமாக நறுக்கிய பனீர் - 200 கிராம்,
குடைமிளகாய் - 100 கிராம்,
வெண்ணெய் - 50 கிராம்,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2,
புதினா விழுது - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்,
பாதாம் - 100 கிராம்,
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்,
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

பாதாமை 6 மணி நேரம் ஊறவைத்து தோல் நீக்காமல் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பனீரை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் வெங்காயம், குடைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கி, தனியாத்தூள் சேர்க்கவும்.

பின்பு பாதாம் விழுதைச் சேர்த்துக் கிளறி, வெந்த பனீர் துண்டுகள், புதினா விழுதை சேர்த்து கிளறவும். இத்துடன் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்த்து கலந்து வறுவலாக வந்ததும் இறக்கி பரிமாறவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2017

    14-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 80thNanjingMassacre

    நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

  • parliament_attacs

    நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

  • therthal_ujarath11

    குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

  • DougJonesvictory

    அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்