குடைமிளகாய் பனீர் ஃப்ரை
2017-06-05@ 13:58:32

என்னென்ன தேவை?
சதுரமாக நறுக்கிய பனீர் - 200 கிராம்,
குடைமிளகாய் - 100 கிராம்,
வெண்ணெய் - 50 கிராம்,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2,
புதினா விழுது - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்,
பாதாம் - 100 கிராம்,
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்,
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
பாதாமை 6 மணி நேரம் ஊறவைத்து தோல் நீக்காமல்
விழுதாக அரைத்துக் கொள்ளவும். பனீரை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக
வைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் வெங்காயம்,
குடைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கி, தனியாத்தூள்
சேர்க்கவும்.
பின்பு பாதாம் விழுதைச் சேர்த்துக் கிளறி, வெந்த பனீர்
துண்டுகள், புதினா விழுதை சேர்த்து கிளறவும். இத்துடன் மிளகுத்தூள், உப்பு,
நறுக்கிய கறிவேப்பிலையைச் சேர்த்து கலந்து வறுவலாக வந்ததும் இறக்கி
பரிமாறவும்.
மேலும் செய்திகள்
10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்
40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்
சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் பெண்களுக்கு பரிசாக வெங்காயத்தை வழங்கினார் புதுச்சேரி முதல்வர்!!