SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழைத்தண்டு மோர்க்குழம்பு

2017-05-31@ 15:21:46

என்னென்ன தேவை?

நறுக்கிய வாழைத்தண்டு - 300 கிராம்,
நறுக்கிய கறிவேப்பிலை - சிறிது,
நறுக்கிய நீர்ப்பூசணிக்காய் - 200 கிராம்,
புளிக்காத மோர் - 300 மி.லி.,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
சின்ன வெங்காயம் - 100 கிராம் (நறுக்கவும்),
சீரகம் - 2 டீஸ்பூன்,
மல்லித்தழை - சிறிது,
தேங்காய்த்துருவல் - 100 கிராம்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 3.


எப்படிச் செய்வது?

மிக்சியில்தேங்காய்த்துருவல், சீரகம், மல்லித்தழை, காய்ந்தமிளகாயை சேர்த்து நைசாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை ஊற்றி வெங்காயம், வாழைத்தண்டு, நீர்ப்பூசணிக்காயை சேர்த்து நன்கு வதக்கி, அரைத்தக் கலவையை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கிளறி, 50 மி.லி. தண்ணீர் ஊற்றி லேசாகக் கொதிக்க விடவும். பச்சைவாசனைப் போனதும் மோரைச் சேர்த்து நன்கு கலக்கவும். மிதமான தீயில் மோரைக் கொதிக்க விடாமல் 5-10 நிமிடங்கள் சூடு செய்து இறக்கி மல்லித்தழையை தூவி காலிஃப்ளவர் சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்பு: நீர்ப்பூசணிக்காய், வாழைத்தண்டின் மேல் தோல் சீவிய பின்பு காயை நறுக்கிப் பயன்படுத்தவும். வடித்த சாதமோ, சப்பாத்தியோ, சிறுதானிய உணவோ அல்லது எந்த ஒரு பருப்பு உணவும் பேலியோ டயட்டில் வராது. எண்ணெயில் பொரித்த பண்டத்தை முற்றிலும் தவிர்க்கவும். பேலியோ டயட்டில் பசி அடங்கும் வரை உண்ண வேண்டும். ஆனால் அடுத்த வேளை உணவு சாப்பிடும் வரை எந்த ஒரு தின்பண்டங்கள், பேலியோவில் சேர்க்காத எந்த ஒரு பழ வகைகளையும் சாப்பிடக்கூடாது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SmokingVolcano

    புகையை கக்கும் எரிமலை : ரம்மியமான காட்சிகள்

  • 20-02-2018

    20-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thashwanth_thookku11

    தமிழகத்தை உலுக்கிய சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை; நீதிபதிக்கு பொதுமக்கள் பாராட்டு

  • kolkata_del_indhia

    அழகிய இந்தியாவின் மெய்சிலிர்க்க வைக்கும் வான்வழி புகைப்படங்கள்

  • haidiZ_market11

    ஹெய்டி ஜவுளிச் சந்தையில் பயங்கர தீ விபத்து : கடைகள் எரிந்து நாசம்; கடை உரிமையாளர்கள் கண்ணீர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X