SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அன்னாசி ரசம்

2017-05-29@ 15:10:16

என்னென்ன தேவை

அன்னாசிப்பழம் : 1 கப்
மல்லி : 2 ஸ்பூன்
மிளகு : 1 ஸ்பூன்
சீரகம் : 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் : 3
சின்ன வெங்காயம் : 3
பூண்டு : 5 பல்
புளி ஒரு எலுமிச்சை அளவு


எப்படி செய்வது

முதலில் அரை கப் அன்னாசி துண்டுகளை, அதே அளவு தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து தனியாக வைக்கவும். பிறகு மிளகு, சீரகம், மல்லி, மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். இப்போது பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயத்தை அரை கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த மிளகு, பூண்டு கரைசல்கள், அன்னாசிப்பழ கரைசலை ஒன்றாக சேர்க்கவும். புளியை தண்ணீர் சேர்த்து கரைத்து  மேற்கண்ட கலவையில் சேர்க்கவும். தேவையான உப்பை போடவும். இவற்றை ஒரு பாத்திரத்தில் வைத்து மிதமான தீயில் கொதிக்க விடும். ரசக்கலவை கொதித்ததும், மீதமுள்ள அன்னாசிப்பழ துண்டுகளை போட்டு, 3 நிமிடங்கள் அவிய விட்டு அடுப்பை அணைக்கவும். அவ்வளவுதான்.. நாவிற்கு சுவையான அன்னாசிப்பழ ரசம் ரெடி. மினி டிப்ஸ் : தொப்பையை குறைக்கும். மிருதுவான குரல் விரும்புவோர் தினமும் ஒரு கப் அன்னாசிப்பழ ஜூஸை அருந்தலாம். வைட்டமின் ‘பி’ சத்து உடையது. எனவே, ரத்த விருத்திக்கு நல்லது. தொண்டைப்புண்ணையும் ஆற்றும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்