SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பச்சைப் பயறு காரக் கொழுக்கட்டை

2017-05-26@ 14:47:30

என்னென்ன தேவை?

பச்சைப் பயறு - அரை கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
காய்ந்த மிளகாய் - 2,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
எண்ணெய் (பூரணத்துக்கு) - 2 டீஸ்பூன்,
பச்சரிசி மாவு - ஒரு கப்,
எண்ணெய் (மேல் மாவுக்கு) - ஒரு டீஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை,
தண்ணீர் - 2 கப்.


எப்படிச் செய்வது?

முதலில் பச்சைப் பயறை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பின் குக்கரில் பயறைப் போட்டு, தேவையான தண்ணீர் விட்டு மூடி அடுப்பில் வைத்து 3 விசில் விட்டு எடுக்கவும். கடாயில் உப்பு, தண்ணீர், ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்க ஆரம்பித்தவுடன் மாவைப் போட்டு கட்டி தட்டாமல் கிளறவும்.

மாவு கெட்டியான பின் அடுப்பை அணைக்கவும். இன்னொரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய மிளகாய் சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன் பெருங்காயத்தூள், கறிவேப்பிலையை சேர்க்கவும். பின்னர் வேகவைத்திருக்கும் பச்சைப் பயறைச் சேர்த்து, நன்றாகக் கிளறி, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து இறக்கி வைக்கவும்.

வெந்த மாவில் இருந்து ஒரு சிறிய உருண்டையை எடுத்து, கைகளால் அழுத்தி சிறு கிண்ணம் போல் செய்து, நடுவில் பச்சைப் பயறு பூரணத்தை வைத்து மூடி கொழுக்கட்டைகளாக செய்யவும். இப்படி எல்லாவற்றையும் செய்து, 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பச்சைப் பயறு காரக் கொழுக்கட்டை தயார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • porattam_arasu_11

    அரசு மருத்துவர்களுக்கான நேர்முக கலந்தாய்வை ரத்து செய்ய கோரி பட்டை நாமம் அணிந்து, ஆணி மேல் நடக்கும் நூதன போராட்டம்

  • afghan_payirr

    சென்னை பரங்கிமலையில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி

  • therthal_pracha

    நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி இளைஞர்கள் ஆர்கேநகர் தொகுதியில் வீடுவீடாக சென்று தீவிர பிரச்சாரம்

  • fusion_complexxx

    ஃப்யூஷன் கருத்தாக்கத்தின் மூலம் அதிகளவு மின்சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய உலகின் சிக்கலான இயந்திரம் : பிரான்ஸில் கட்டமைப்பு

  • idaitherthal_11

    சூடு பிடிக்கிறது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : வேட்பாளர்கள் மதுசூதனன், மருது கணேஷ், டிடிவி தினகரன் தீவிர வாக்கு சேகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்