SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேலியோ அவியல்

2017-05-16@ 14:11:36

என்னென்ன தேவை?

சுரைக்காய் - 200 கிராம்,
கோவைக்காய் - 100 கிராம்,
நீர்ப்பூசணிக்காய் - 100 கிராம்,
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
முருங்கைக்காய் - 100 கிராம் (நறுக்கியது),
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
சேனைக்கிழங்கு - 50 கிராம்,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவைக்கு,
புளிக்காத தயிர் - 200 மி.லி,
சீரகம் - 1 டீஸ்பூன்.

மசாலா அரைக்க...

தேங்காய் - 200 கிராம்,
பச்சைமிளகாய் - 3,
சீரகம் - 2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

மசாலா அரைக்க கொடுத்தவற்றை அரைத்து கொள்ளவும். கடாயில் 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயை விட்டு நறுக்கிய சுரைக்காய், முருங்கைக்காய், கோவைக்காய், சேனைக்கிழங்கை போட்டு வதக்கி, தேவையான தண்ணீர், மஞ்சள் தூள், உப்புச் சேர்த்து கலந்து, குக்கருக்கு மாற்றி 1 விசில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த விழுது, வேகவைத்த காய்களைச் சேர்த்து கிளறவும்.

மற்றொரு கடாயில் மீதியுள்ள தேங்காய் எண்ணெயை விட்டு கறிவேப்பிலை, சீரகத்தைத் தாளித்து, காய்கறி கலவையில் கொட்டி கிளறி இறக்கவும். ஆறியதும் தயிரை நன்கு அடித்து சேர்க்கவும். தேவையானால் உப்பு சேர்த்து, சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, காலிஃப்ளவர் சாதத்துடன் பரிமாறவும். ஃப்ரிட்ஜில் வைக்காமலும் பரிமாறலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • porattam_arasu_11

    அரசு மருத்துவர்களுக்கான நேர்முக கலந்தாய்வை ரத்து செய்ய கோரி பட்டை நாமம் அணிந்து, ஆணி மேல் நடக்கும் நூதன போராட்டம்

  • afghan_payirr

    சென்னை பரங்கிமலையில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி

  • therthal_pracha

    நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி இளைஞர்கள் ஆர்கேநகர் தொகுதியில் வீடுவீடாக சென்று தீவிர பிரச்சாரம்

  • fusion_complexxx

    ஃப்யூஷன் கருத்தாக்கத்தின் மூலம் அதிகளவு மின்சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய உலகின் சிக்கலான இயந்திரம் : பிரான்ஸில் கட்டமைப்பு

  • idaitherthal_11

    சூடு பிடிக்கிறது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : வேட்பாளர்கள் மதுசூதனன், மருது கணேஷ், டிடிவி தினகரன் தீவிர வாக்கு சேகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்