SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெள்ளரிக்காய் பொரித்த குழம்பு

2017-05-08@ 15:02:40

என்னென்ன தேவை?

நறுக்கிய வெள்ளரிக்காய் - ஒரு கப்,
வேகவைத்த துவரம்பருப்பு,
பாசிப்பருப்பு - தலா கால் கப்,
சாம்பார் பொடி - அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க...

தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு.

வறுத்து அரைக்க...

கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.

naltrexone low dose depression open how to get naltrexone out of your system


எப்படிச் செய்வது?

கடாய் ஒன்று எடுத்து வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை வறுத்து வைக்கவும். ஆறியபின் ஜாரில் சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். அதே கடாயில் தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து வைக்கவும்.

இதனுடன் தண்ணீர் ஊற்றி வெள்ளரிக்காய், உப்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி சேர்த்து வேகவிடவும். பின், வேகவைத்த பருப்பு, அரைத்த விழுது சேர்த்துக் கலந்து 5-6 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கினால் வெள்ளரிக்காய் பொரித்த குழம்பு ரெடி!!!

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்