இது கீழக்கரை ஸ்பெஷல் தொதல்
2010-03-01@ 12:19:05

யாழ்ப்பாணத்து தமிழர்கள்உணவில் ஏதாவது ஒருவகையில் தேங்காய் கண்டிப்பாக இடம் பெற்றுவிடும். காரணம்,
அங்கு விளையும் தேங்காயின் வடிவமும், பருப்பின் திடமும் நம்மூரைப் போல இரண்டு மடங்கு பெரிது. அதனாலேயே
தொதல் அங்கு பிறந்தது என்று சொல்லலாம். ஆமாம், தொதலின் முக்கியச் சேர்மானம்
பாலெடுக்கத் தகுந்த அவ்விதமான தேங்காய்தான்.
யாழ்ப்பாணத்தில் இருந்து தொதலின் தொழில்நுட்பத்தை கொத்திக்கொண்டு
கீழக்கரைக்கு வந்தவர் செல்லக்கனி.பழைய கொத்ஃபா பள்ளித் தெருவில், 40
வருடங்களாக குடிசைத் தொழில் போல தொதல் தயாரித்து விற்பனை செய்து
வருகிறார். இவரது தயாரிப்புக்கு பேக்கரிக்காரர்கள் மத்தியில் நல்ல வர வேற்பு. இன்று
செல்லக்கனி தவிர 20க்கும் மேற்பட்டஇஸ்லாமியப் பெண்களும் இத் பெயரைப் பார்த்து விட்டு, தமிழர்களுக்கு
தொடர்பில்லாத ஏதோ ஒரு உணவு போல...என்று நினைத்து விடாதீர்கள். இது ஐஎஸ்ஐ
முத்திரை குத்தப்பட்ட தமிழர்களின் இனிப்பு வகை.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கிடைக்கும் ‘தொதலின்’ பூர்வீகம் யாழ்ப்பாணம்.
தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.விடுமுறை நாளான வெள்க்கிழமை தவிர, மற்ற தினங்களில் பேக்
கரிக்காரர்கள், வெளிநாடு செல்பவர்கள், சுற்றுலா வந்தவர்கள் என அனைவரும் இவர்கள்வீட்டு முன்னால்
திருவிழா போல கூடிவிடுகிறார்கள். அதிகாலை 5 மணிக்குத் தொடங்கி 8 மணிக்குள்ளாக விற்பனையை
முடித்துவிட்டு வேறு வேலைக்கு கிளம்பி விடுகிறார்கள்.
மூன்றே மணிநேரத்தில் நல்ல லாபம்.சேர்மானம் வேறாக இருந்தாலும் செய்முறை கிட்டத்தட்ட
அல்வாவைப் போல இருப்பதால் ‘தொதலை’ கருப்பு அல்வா என்கிறார்கள்.அரை கிலோ பச்சரிசி, 6 தேங்காய், கால் கிலோ ஜவ்வரிசி,
2 கிலோ சர்க்கரை, 1 கிலோ கருப்பட்டி, இவை தவிர வறுத்த பாசிப்பயறு, கொஞ்சம் ஏலக்காய், முந்திரி, டால்டா, கால்
கிலோ நெய்.
பச்சரிசியை களைந்து மிதமான ஈரத்தில் ஃபிளவர் மில்லில் அரைக்க வேண்டும். தேங்காயை உடைத்து பாலெடுக்க வேண்டும்.
ஜவ்வரிசியை 3 மணி நேரங்கள்முன்னதாக ஊற வைக்க வேண்டும். மூன்றையும் கலந்து மிதமான சூட்டில் வைத்து
சர்க்கரை, கருப்பட்டியை சிறிது சிறிதாகக் கொட்டிக் கிண்ட வேண்டும். கொஞ்சம் பதமாக வெந்து அடங்கியதும் நெய்,
டால்டாவைப் போட்டு சுருள, சுருள கிண்ட வேண்டும். சற்று அசந்தாலும் புகைவாடை ஏறிவிடும். எனவே ஜாக்கிரதையாக
சுமார் முக்கால் மணி நேரம் கிண்ட வேண்டும்.
தேங்காய்ப்பால் எண்ணெயாகி மிதக்கும் நேரத்தில் முந்திரி,பாசிப்பயறு, ஏலக்காய் போட்டு இறக்கி அகன்ற தட்டில் ஊற்றினால்,
அடுத்த அரைமணி நேரத்தில் உறைந்து அல்வா பதத்துக்கு வந்துவிடும். முதல் நாள்செய்து மறுநாள்சாப்பிட்டால்தித்திக்கும்.
1 மாதம் வரைக்கும் கெட்டுப்போகாது என்பது
சிறப்பு.
மேலும் செய்திகள்
22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்
கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்
அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!