ரெயின்போ மஃபின்ஸ்
2015-06-10@ 16:30:15

என்னென்ன தேவை?
(8 மஃபின்ஸ் செய்ய...)
மைதா - 1 ½ கப்
சோள மாவு (வெள்ளை) - 3 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1 கப்
சர்க்கரை - ¾ கப்
எண்ணெய் - ½ கப்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - ½ டீஸ்பூன்
வெனிலா எெசன்ஸ் - 1 டீஸ்பூன்
மஞ்சள், பச்சை, நீலம், சிவப்பு ஆகிய நிறங்கள் - தலா ¼ டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ஒரு கிண்ணத்தில் மைதாவை எடுத்துக்கொள்ளவும். அதிலிருந்து 3 டேபிள்ஸ்பூன் மாவை எடுத்துவிடவும். 2. இதில், 3 டேபிள்ஸ்பூன் சோள மாவை சேர்த்து, நன்றாகக் கலக்கவும். இதைத் தனியாக வைக்கவும். ஒரு வாயகன்ற கிண்ணத்தில் தயிர், சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கலக்கவும். 4. இதில், வெனிலா எெசன்ஸ், பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவை சற்று நுரைத்துக் காணப்படும். 5. எண்ணெயை சேர்க்கவும். 6. நன்கு கலக்கவும். இதில், நாம் முன்பு கலந்து வைத்த மைதா மாவு + சோள மாவுக் கலவையை ¼ கப் சேர்த்து முதலில் கலக்கவும். பின்பு, இதே போல ¼ கப் மாவு சேர்த்து, கலந்தவுடன், அடுத்த ¼ கப் மாவை சேர்த்து கலக்க வேண்டும்.
மாவு முழுவதும் இந்த முறைப்படியே கலக்க வேண்டும். இந்த கரைத்த மாவை, நான்காகப் பிரித்து, அதில் ஒவ்வொன்றிலும் ஒரு வண்ணத்தைச் சேர்த்து கலக்கவும். ஒரு மஃபின் பானில், மஃபின் லைனர் எனப்படும் தாளை வைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு ஒவ்வொன்றாக, 4 நிற மாவையும் ஊற்ற வேண்டும். அவனை 1800Cஅளவுக்கு ப்ரி ஹீட் செய்து, அதில் மஃபினை 20 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். ஒரு கத்தியை உள்ளே விட்டால், ஒட்டாமல் சுத்தமான கத்தி வெளி வந்தால், மஃபின் தயாராகி விட்டதாக அர்த்தம். 10 நிமிடங்கள் பானில் விட்டு, பிறகு மஃபினை வயர் ராக்கில் ஆற வைக்க வேண்டும்.
Tags:
Maida take a bowl. Take 3 tablespoons of the dough. 2. In this case along with 3 tablespoons of corn flour mix well. Place this alone.மேலும் செய்திகள்
ஆட்டையாம்பட்டி முறுக்கு அமெரிக்காவில் கமகமக்குது
ஹோட்டல் உணவை வீட்டிலேயே செய்யலாம்!
உணவுத் தொழிற்சாலை
தேன் மிட்டாய்
இலந்தைவடை
கமர் கட்
சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி
பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை
சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை
ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!