குதிரைவாலி புலாவ்

Date: 2013-03-22@ 16:46:50

என்னென்ன தேவை?
குதிரைவாலி அரிசி - 1 கப்,
கேரட், பட்டாணி, பீன்ஸ் - 1 கப்,
நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்,
கெட்டியான தேங்காய் பால் - 1 கப்,
தண்ணீர் - 1 கப்,
உப்பு - தேவையான அளவு.
தாளிப்பதற்கு...
பட்டை - ஒரு பெரிய துண்டு,
கிராம்பு - 2,
முந்திரி - 5,
எண்ணெயும் நெய்யும் சேர்த்து - 2 டேபிள்ஸ்பூன்.
அரைப்பதற்கு...
இஞ்சி - ஒரு பெரிய துண்டு,
பூண்டு - 5, பச்சை மிளகாய் - 5.

sms spy app read spy apps free
buy viagra buy online viagra side effects of viagra tablets


எப்படிச் செய்வது?


குதிரைவாலி அரிசியைக் கழுவி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெயும் நெய்யுமாக ஒரு டீஸ்பூன் விட்டு பட்டை, கிராம்பு, முந்திரி  தாளித்து வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் 2 நிமிடங்கள் வதங்கியதும் காய்கறிகளைச் சேர்க்கவும். அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை  வாசனை போகும் வரை வதக்கவும். தண்ணீரைச் சேர்த்து உப்பு போட்டுக் கொதிக்கவிடவும்.

கொதி வந்ததும் தேங்காய் பாலும் அரிசியும் சேர்க்கவும். அத்துடன் மீதமிருக்கும் எண்ணெயும் நெய்யும் சேர்த்து குக்கரை மூடி மிகக் குறைந்த  தணலில் 15 நிமிடங்கள் வைக்கவும். திறந்து மேலும் சிறிது நெய்விட்டு, தயிர் பச்சடி அல்லது தக்காளி குருமாவுடன் பரிமாறவும். 4 தேங்காய் பாலை  அரிசி போடும் போது சேர்த்தால் சுவையும் நிறமும் மாறாமல் இருக்கும். பழைய குதிரைவாலி எனில் இன்னும் அரை கப் தண்ணீர் சேர்க்கலாம்.

abortion at 17 weeks san antonio abortion clinics free abortion clinics in chicago
buy viagra buy online viagra side effects of viagra tablets

Like Us on Facebook Dinkaran Daily News