கஞ்சி சூப்
மாற்றம் செய்த நேரம்:3/15/2013 3:07:13 PM
என்னென்ன தேவை?
சாதம் வடித்த கஞ்சி - 2 கப்,
புளித்த மோர் - அரை கப்,
இஞ்சி - ஒரு துண்டு,
பச்சை மிளகாய் - 2 அல்லது 3,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு - சுவைக்கேற்ப,
காய்கறிக் கலவை (விரும்பினால்) - கால் கப்,
மல்லித்தழை - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்வது எப்படி ?
பச்சை மிளகாய், இஞ்சியை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையை போட்டு வதக்கி, (காய்கறி சேர்ப்பதானால் இப்போது சேர்த்து வதக்கி), வடித்த கஞ்சி, அரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடுங்கள். பிறகு இறக்கிவைத்து, கடைந்த புளித்த மோரை அதனுடன் சேருங்கள். மல்லித்தழை தூவிப் பரிமாறுங்கள்.




















