Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

கம்பு இலை அடை (இனிப்பு)

மாற்றம் செய்த நேரம்:3/14/2013 4:42:44 PMGrind the soaked naic kampariciyai take 3 hours. Pan fry in oil, ground flour with a pinch of salt and stir kaivitamal take solid.


என்னென்ன தேவை?

கம்பரிசி - 1 கப்,
கடலைப்பருப்பு - அரை கப்,
வெல்லம் - அரை கப்,
முந்திரி - 6,
ஏலக்காய் பொடி - அரை டீஸ்பூன்,
நெய் - 1 டீஸ்பூன்,
தேங்காய் துருவியது - கால் கப்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
வாழை இலை - 5.
எப்படிச் செய்வது?

மேல் மாவுக்கு...
கம்பரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து நைசாக அரைத்து எடுக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி, அரைத்த மாவையும் ஒரு சிட்டிகை உப்பையும்  போட்டு கைவிடாமல் கெட்டியாகக் கிளறி எடுக்கவும். மாவு ஆறியதும் கையில் சிறிது எண்ணெய் தடவி கட்டியில்லாமல் மிருதுவாகப் பிசைந்து  வைக்கவும்.

பூரணம் செய்ய...

கடலைப் பருப்பை குக்கரில் ஒரு விசில் வேகவிட்டு எடுத்து ஆறவைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு சேர்த்துக் கெட்டியாக அரைத்து  எடுக்கவும். வாணலியில் நெய்விட்டு முந்திரியை வறுக்கவும். அதில் இந்த பூரணத்தை போட்டு சுருள கிளறவும். கிளறியதும் தேங்காய் துருவல்,  ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறி ஆறவிடவும். வாழை இலையை லேசாக எண்ணெய் தடவி வெறும் தணலில் காட்டவும். அதில் கம்பு மாவை  வைத்து தட்டி பூரணத்தை உள் வைத்து இலையை மூடி இட்லி பானையில் 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். 4 பாரம்பரிய இந்த இனிப்பு  அடையை கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம்.

Grind the soaked naic kampariciyai take 3 hours. Pan fry in oil, ground flour with a pinch of salt and stir kaivitamal take solid.
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

ஆங்காங்கே வெண்மை நிறத் திட்டுகளுடன் வறண்டு போகிற சருமம்...பொடுகும் பிசுபிசுப்புமாக பிரச்னைதருகிற கூந்தல்...சொரசொர கைகள்... தடித்தும் வெடித்தும் போகிற பாதங்கள்...இன்னும் இப்படி பனிக்காலத்தில் படையெடுக்கும் அழகுப் ...

ததும்பி வழியும் மௌனம்ஒருமுறை கோவா சென்றிருந்தோம். கோவாவில் சில விஷயங்கள் இன்றும் அபூர்வம்... புடவை கட்டிய பெண்கள்... புகையும் மதுவும் அற்ற உணவகம்... கோவாவின் மக்கள் ...

Advertisement

சற்று முன்

Advertisement

மருத்துவம்


Advertisement

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

29

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
உதவி
சிக்கல்
பிரச்னை
மகிழ்ச்சி
தன்னம்பிக்கை
நட்பு
தைரியம்
வெற்றி
செயல்
கவலை
எதிர்மறை
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran