SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அவதானப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன்

2015-08-06@ 11:40:56

500 ஆடுகள் பலியிட்டு கறி விருந்து

கிருஷ்ணகிரி : அவதனாப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவினையொட்டி 500 ஆடுகள், 2 ஆயிரம் சேவல்கள் பலியிட்டு கறி விருந்து படைத்தனர். கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டியில் பழமையும், சக்தியும் வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திருவிழா 7 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் 163ம்ஆண்டு ஆடித்திருவிழா கடந்த 30ம்தேதி கணபதிபூஜை கொடியேற்றுதல், காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து 31ம்தேதி சந்தனக்காப்பு, பால்அபிஷேகம், 1ம்தேதி சந்தனம், விபூதி, குங்குமம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சியும், 2ம்தேதி நெய்விளக்கு, தீபாராதனையும் நடந்தது.

3ம்தேதி அம்மனை நீராட்டி, பால், தயிர், இளநீர் அபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகளும், 4ம்தேதி கோலாட்டம், அம்மன் ஊர்வலம் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் கடைசி நாளான நேற்று அவதானப்பட்டி மற்றும் இக்கிராமத்திற்கு உட்பட்ட புளுகன்கொட்டாய், உத்தேரிகொட்டாய், சென்றாயன்கொட்டாய், தாசன்கொட்டாய், தப்பரசான்கொட்டாய், வண்டிக்காரன் கொட்டாய், கோடிமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் மாவிளக்குடன் ஊர்வலம் நடத்தி சாமி தரிசனம் செய்தனர். அத்துடன் 500 ஆடுகள், 2 ஆயிரம் சேவல்கள் பலியிட்டு, சமைத்து தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விருந்து வைத்து மகிழ்ந்தனர்.

watching my girlfriend cheat prashanthiblog.com my girlfriend cheated

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2019

    18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்