SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேப்பனஹள்ளியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமர் கோயில்

2015-04-28@ 09:43:17

வேப்பனஹள்ளியில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமர் கோயில் இப்பகுதிக்கு பெருமை சேர்க்கின்றது. வேப்பனஹள்ளி அருகே பூதிமுட்லு கிராமத்தில்  அமைந்துள்ள கோதண்ட ராமசுவாமி திருக்கோயில் நானூறு ஆண்டுகள் பழமையானதும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் ஆண்டு தோறும்  நடைபெறும் சுவாமிகளின் தேர்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாது. இத் திருவிழாவைக்காண தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய  மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்ததர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயில் கட்டி முடிக்கப்பட்ட பின் இரண்டு ஆண்டுகள் சிலைகள் வைக்கப்படாமலேயே  இருந்து பின் சிலைகள் நிர்மாணிக்கப்பட்டது. இதன் சுவராசியமான வரலாறு. இக்கோயில் மற்றும் அதன் அருகே தெப்பக்குளம் ஆகியவை திருமலகவுடு  என்பவரால் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இக்கோயில் கட்டி முடிக்கப்பட்ட பின் புதியதாக சிலைகளை வடித்து பிரதிஷ்டை செய்ய  விருப்பமில்லாமல், பல ஆண்டுகள் ஆகம பூஜை செய்யப்பட்டு பூரண மகிமை உள்ள சாமி சிலைகளையே வைக்க வேண்டும் என திருமல கவுடு விரும்பிதால்  அதற்காக காத்திருந்தார்.

அவ்வாறு பல ஆண்டுகள் ஆகம பூஜைகள் செய்யப்பட்ட சிலைகளை தேடிக்கொண்டிருக்கையில், ஓசூர் தாலுக்காவில் உள்ள ரத்தினகிரி மலை மேல் பாழடைந்த  ராமர் கோயில் ஒன்று இருப்பதாக அறிந்த திருமலகவுடு அவர்கள் அங்கு சென்று அர்ச்சகரிடம் விசாரித்ததில் இக்கோயில் பல ஆண்டு காலம் ஆகம விதிகளின்  படி பூஜைகள் செய்யப்பட்டு வந்ததாகவும் தற்போது பல காரணங்களால் எந்த சேவையும் நடைபெறாமல் உள்ளதாக தெரிவித்தார்.  அதன்பின் தன்னுடைய  விருப்பத்தை அர்ச்சகரிடம் திருமல கவுடு சொல்ல, அங்கிருந்து ஸ்ரீராம லக்ஷ்மண, சீதாபிராட்டி, மற்றும் ஆஞ்சநேயர் சிலைகளை கொண்டு செல்ல அர்ச்சகர்  அனுமதித்துள்ளார்.மேலும் ரத்தினகிரி கோயிலில் சீதாபிராட்டியார் ராமருக்கு வலதுபுறமாக வைக்கப்பட்டிருந்ததால் பூதிமுட்லு கோயிலிலும் அவ்வாறே  வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க இங்கும் சீதாபிராட்டியார் அவ்வாறே ராமருக்கு வலது புறமாக நிறுவப்பட்டுள்ளார்.

ராமர், லஷ்மணர், சீதா பிராட்டியார், ஆஞ்சநேயர் ஆகிய நான்கு சிலைகளையும் ரத்தினகிரி மலைமீதிருந்து கொண்டு வரும்போது மிகப்பெரிய ஆஞ்சநேயர்  சிலையை கொண்டு வர அக்காலத்தில் போதிய வசதி இல்லாததால் வரும் வழியில் பொம்மதாதனூர் என்னும் கிராமத்தின் அருகில் வைத்தனர். திருமலகவுடு வருடம் ஒரு முறை பூதிமுட்லு ஸ்ரீராமருக்கு துளசி மாலை சாற்றி பூஜை செய்த பின் அந்த மாலையை பொம்மதாதனூர்  ஆஞ்சநேயருக்கு  சமர்ப்பித்துக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது அந்த சேவை தொடரப்படாமல் நிறுத்தப்பட்டுவிட்டது.இவ்வாறு இக்கோயிலில் உள்ள சிலைகள் பிரதிஷ்டை  செய்யப்பட்டு அணைத்து கால பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. வருடத்திற்கு ஒரு முறை இக்கோயிலில் நடைபெறும் திருத்தேர் உலா மிகவும் பிரசித்தி  பெற்றதாகும். இத்இத்தேர்திருவிழாவில் கல் சக்கரம் பூட்டிய தேரில் சுவாமிகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். திருவிழாவைக் காண தமிழ்நாடு  மட்டுமின்றி, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

 • chinadance

  சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

 • Autoshow2019

  கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்