SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போளூருக்கு பெருமை சேர்க்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மசுவாமி கோயில்

2015-04-11@ 10:13:24

போளூர் என்று கூறும்போது அடையாளப்படுத்துவதற்கு பழங்காலச் சின்னமான ஸ்ரீ லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலைத்தான் குறிப்பிட்டாக வேண்டும். அந்தக்கோயில் அந்தளவிற்கு பிரசித்தி பெற்ற தலமாகும். பிரகலாதன் என்னும் குழந்தையைக் காக்க அவன் பக்தியின் பெருமையை உலகிற்குச் சொல்ல திருமால் எடுத்த தசாவதாரங்களில் நான்காவது அவதாரம் தான் நரசிம்ம அவதாரம். கி.பி.3ம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.9ம் நூற்றாண்டு வரை சிறப்பாக ஆண்ட பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில் தான் நரசிம்மமூர்த்திக்கு திருக்கோயில்கள் அமைக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள நரசிம்ம அவதார கோயில்கள் அனைத்தும் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டு சோழர், பாண்டியர், விஜய நகர அரசர்கள் மற்றும் நாயக்க மன்னர்களால் வளர்ச்சி பெற்றுள்ளது என்பது வரலாற்று செய்தி. அந்த வகையில் போளூர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் கி.பி.3 ம் நூற்றாண்டிற்கும், கி.பி.9ம் நூற்றாண்டிற்கும் இடைபட்டது என அறியப்படுகிறது. மேலும், எழுத்தாளர் ஸ்ரீ வேணுகோபாலன் எழுதிய ஸ்ரீ திருவரங்கன் உலா வரலாற்று ஆன்மிக நாவலில் முஸ்லிம்கள் படையெடுப்பின்போது திருவரங்கத்தில் இருந்த விக்கிரகத்தை பல்வேறு இடங்களுக்கு எடுத்து சென்று மறைத்து வைத்தனர்.

அந்த விக்கிரகம் எங்கெல்லாம் கொண்டு போய் வைக்கப்பட்டதோ அங்கெல்லாம் பெருமாள் கோயில் உருவானதாக வரலாறு உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படிப்பட்ட பெருமைகள் வாய்ந்த மலையில் புலஸ்திய முனிவர் நெடுங்காலம் தங்கியிருந்து தவம் செய்ததும், இம்மலையில் உள்ள யானைக்குகை என்ற இடத்தில் அச்சுதாச சுவாமிகளும், ஞானானந்த சுவாமிகளும், லட்சுமி நரசிம்மரை வணங்கிதான் தவம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருவேங்கடன் கோயில் கொண்டுள்ள தலங்களை 108 திவ்ய திருப்பதிகள் என்பார்கள்.

இருந்தாலும் நரசிம்ம அவதார கோலத்தில் எழுந்தருளிய தலங்கள் தமிழகத்தில் 9 மட்டுமே. அதில் போளூர் சம்பத்கிரி மலை ஒன்று என்பதும் குறிப் பிடத்தக்கது. இம்மலையில் கடந்த 2005-ம் ஆண்டு பெரிய அளவிலான சங்கு, சக்கர, நாமம் மலையின் உச்சியில் வண்ண நியான் குழல் விளக்குகளால் அமைக்கப்பட்டது. மலையடி வாரத்தில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி மலையில் உள்ள நரசிம்மரைப் பார்ப்பதுபோல் அமைக்கப்பட்டிருப்பதும் சிறப்பானதாகும். இவ்வளவு பெருமை வாய்ந்த மலையில் மலை சுற்றும் பாதை வசதியில்லாமல் இருந்தது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் பாதையை ஏற்படுத்த முடியாமை, ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு இடர்பாடுகளால் திட்டம் தள்ளிப்போனது.

மலையின் பெருமையை உணர்ந்த பக்தர்கள் அந்த கஷ்டத்தையும் மீறி சிரமப்பட்டு மலையைச் சுற்றி வந்து பலன் பெற்றனர். கடந்த வருடம் நடைபெற்ற நகர வளர்ச்சிக்குழு கூட்டத்தில் பாதை அமைக்கக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் விளைவாக மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர் அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு பணியும் நிறைவடைந்துள்ளது. பேரூராட்சி நிர்வாகம் மலையைச் சுற்றி தார்சாலை அமைத்ததை பாராட்டும் வேளையில் முக்கிய நாட்களான பவுர்ணமி, அமாவாசை, மாதப்பிறப்பு, பிரம்மோற்சவம் போன்ற நாட்களில் கிரிவலம் வர ஏதுவாக மலை சுற்றும் பாதையில் மின்விளக்குகள் அமைக்கும் பட்சத்தில் பக்தர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

 • hungary_policepadhuga11

  புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

 • ThaiSanctuaryPiano

  யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்