SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழநி பாதயாத்திரை - திருத்தலப் பயணம்

2015-02-03@ 12:15:46

பாதயாத்திரை என்ற சொல்லுக்கு விளக்கம் முருக பக்தர்கள் தங்கள் கால்களில் எவ்வித செருப் பும் அணியாது விரதம் இருந்து வெறும் பாதத்தில்  யாத்திரையாக நடந்து வருவது ஆகும். யாத்திரை என்ற சொல்லுக்கு திருத் தலப் பயணம் என்ற ஆன் மீக அன்பர்கள் விளக்கம் தருகின்றனர்.  கடுமையான குளிர், வெயில், பனியில் விரதம் இருந்து கரடு முர டான பாதையில் முருகா! முருகா! என்ற திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே  வருகின்றனர். முருக பக்தர்கள் கூட்டம் கூட்டமாய் குடும்பத்தோடு ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள் என்ற பேதம் இல்லாது தைப்பூசம்  பாதயாத்திரையில் பங்கு கொண்டு முருகனைக் கண்டு வரம் பெற்றுச் செல்ல நடந்து வருகின்றனர்.

முருகப் பெருமானைப் பக்தர்கள் தங்களது குல தெய்வமாகக் கருதி ஆண்டு தோறும் நடந்து வந்து நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகின்றனர்.  பாயாத்திரை முருக பக்தர்களிடம்மன தைரியத்தை ஏற்படுத்தி, செய்யும் செயலில் நம் பிக்கையை ஏற்படுத்துகின்றது. பாதயாத்திரையானது கூட்டு  வழிபாட்டு முறையினை பலப்படுத்துகின்றது. தமிழகத்தில் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், புதுக்கோட்டை, நத்தம், மதுரை, அலங்காநல்லூர்,  திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், வேடசந்தூர், கரூர், சேலம் போன்ற ஊர்களில் இருந்து ஏராளமான முருகபக்தர்கள் பாதயாத்திரையாய் கூட்டம்  கூட்டமாய் ஆறுமுகக் காவடியை தோளில் சுமந்து வந்து தைப்பூச முருகனைக் கண்டு வழிபடுகின்றனர்.

பாதயாத்திரை தொடங்கி விட்டால் வழியில் ஏற்படும் துன்பங்களை ஒரு பொருட்டாகவே முருக பக்தர்கள் எடுத்துக்கொள்வது இல்லை. சிறுவர்கள்,  பெண்கள் காலில் செருப்பு இல்லாது உச்சி வெயிலில் தார் ரோடுகளில் முருகா! முருகா! என்று கூறிக் கொண்டே பாதயாத்திரையாய் பயணத்தைத்  தொடர்ந்து கொண்டு வருகின்றனர். பாதயாத்திரையில் முருகபக்தர்கள் முருகன் மீது பல பாடல்களைப் பாடியும் ஆடியும் வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

  • tightropewalker

    நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

  • 16-08-2019

    16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்