SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொடியேற்றத்தில் அளவில்லாத சக்தியுடன் திகழும் முருகன்

2015-02-03@ 12:13:38

பழநி முருகன் கோயில் தைப்பூச விழாவில் பாத யாத்திரை சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. தை பிறந்து விட்டால் பக்தர்கள் கூட்டம், கூட்டமாக  பழநி முருகனைக் காண வந்த வண்ணம் உள்ளனர். காரைக்குடி, தேவகோட்டை, நத்தம், திண்டுக்கல், தேனி, போடி, உத்தமபாளையம், சின்னமனூர்,  திருச்சி, கரூர், மதுரை போன்ற ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவி உடை அணிந்து தோள்களில் காவடி சுமந்து முருகா முருகா என்று  பக்தி பரவசத்துடன் வந்த வண்ணம் உள்ளனர். பழநி தைப்பூச விழாவில் பாதயாத்திரை முதன்மை வகிக்கிறது. செட்டிநாட்டுப் பகுதியில் இருந்து  ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து மயிற்காவடி, சேவல்காவடி, வேல்காவடி, ஆறுமுகக்காவடி கொண்டு வருகின்றனர். பாதயாத்திரையால்  பாவ வினைகள் நீங்குகின்றன.

முருகப் பெருமானைப் பலர் தங்களது குல தெய்வமாகக் கருதி ஆண்டுதோறும் நடந்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். பாதயாத்திரை  முருக பக்தர்களிடம் மன தைரியத்தை ஏற்படுத்தி செய்யும் செய லில் நம்பிக்கையை ஏற் படுத்துகிறது. பாதயாத்திரை கூட்டு வழிபாட்டு முறையை  பலப்படுத்துகிறது. பழநி திருத்தலத்திற்கு பாதயாத்திரையாக உணவு, உறக்கத்தை மறந்து, உறவுகளை மறந்து மெய்யன்போடு தைப்பூச முருகனை  கண்டு வணங் கினால் முக்தியும், வீடு பேறும் நிச்சயம் கிடைக்கும். பழநி தைப்பூச கொடியேற்ற விழாவைக் காண தேவர்களும், முனி வர்களும் இங்கு  வந்து முருகப்பெருமானை வாழ்த்தி அசுரர்களை அழிக்க அருள்புரிவார்கள் என்று மக்கள் நம்புகின்றனர்.

மூன்றாம்படை வீடான பழநியில் முருகப்பெருமானுக்கு தைப்பூசத் திருவிழா தொடங்கி விட்டதென உலகத்தவருக்கும், தேவர்களுக்கும் அறிவிக்கும்  தொடக்க நிகழ்ச்சியே கொடியேற்றத்தின் சிறப்பாகும். தைப்பூச கொடியேற்றத்தின் போது முருகப் பெருமான் அளவில்லாத சக்திகளை ஒருங்கே  பெற்றுத் திகழ்வார். உலகிலுள்ள துஷ்ட சக்திகளை அழிக்கும் ஆற்றல் முருகப் பெருமானிடம் ஆர்ப்பரிக்கும். வெற்றியை நிலைநாட்டும் பலம்  கொண்டவராய் தைப்பூச காலங் களில் முருகப் பெருமான் பழநியில் காட்சி தருகிறார்.

அப்போது முருக பக்தர்கள் தங்கள் உடலில் காவி உடை அணிந்து கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்து முருகா...முருகா...! என்ற திருநாமத்தை  பலமுறை சொல்லித் துதித்தால் மலையென வரும் துன்பங்கள் பனியென விலகிப் போகும். சண்முக நதியில் புனித நீராடி தைப்பூசத் திருவிழாவை  கண்டு களித்தால் தரித்திரங்கள் விலகிப் போகும். முருக வழிபாட்டில் காவடி பிரதான இடம் பெறுகிறது. மற்ற எந்த தெய்வத்திற்கும் இல்லாத சிறப்பு  இது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • africaslavarieshouse

  1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

 • southwestchinaflo

  தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

 • turkeyprotest

  துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

 • 21-08-2019

  21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்