SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீவினைகளின் பிடியில் சிக்கியவர்களை நல்வழிப்படுத்தும் சேவற்கொடியோன்

2015-02-03@ 12:10:46

திருவிழாக் காலங்களில் முருகபக்தர்கள் தங்கள் வேண்டு தல்கள் நிறைவேறிய பின்னர் தங்கள் ஊரில் இருந்து குடும்பத்தோடு பாதயாத்திரையாக  வந்து சேவல், புறா போன்றவைகளை காணிக்கையாக சுமந்து வந்து பழநி மலைக்கோயிலில் செலுத்துகின்றனர். இக்காணிக்கையால் குடும்ப விருத்தி  அடையும். நோய் நம்மை விட்டு நீங்கும். ஆயுள் பெருகும். கெட்ட கனவுகள் தொலையும். தீராத தீய வினைகள் நீங்கும். பில்லி, சூனியம் அழியும்.  தரித்திரம் நீங்கி வளம் பெருகும். பலநாட்கள் விரதம் இருந்து மாலை அணிந்து பாதயாத்திரையாய் பழநி வந்து முருகனை வழிபட வரும் பக்தர்கள்  தங்கள் நிலத்தில் விவசாயம் செழிக்க பசு, எருது உள் ளிட்ட விலங்குகளை நேர்த்திக்கடனாகவும் காணிக்கையாகவும் செலுத்தி வழிபட்டுச்  செல்கின்றனர்.

திருவாவினன்குடித் திரு த்தலத்தில் எண் ணற்ற முருக பக்தர்கள் பசுமாட்டினைக் காணிக்கையாகச் செலுத் துகின்றனர். பசுவின் உடலில்  முருகனுக்குச் சொந்தம் என எழுதி மாலை மரியாதை செய்து வழிபட்டுச் செல்கின்றனர். இக்காணிக்கை செலுத்துவதால் குடும்ப கஷ்டங்கள் விலகி  நிலத்தில் விளைச்சல் பெருகி தொழில் சிறக்கும். துயரங்கள் ஒழியும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். பொருளோ, உயிரினமோ மட்டும் காணிக்கை  இல்லை. வேண்டுதல் காணிக்கை எந்த காணிக்கையும் எண்ணாது பிரார்த்தனை செய்தவர்கள் பலரும் அது நிறை வேறியவுடன் சன் னிதானத்தில்  தங்கள் மன தில் படும் காணிக்கைகளை செலுத்தி விடுகின்றனர். சிலர் தங்கள் குடும்பத்திற்கு, சமுதாயத்தில் அவப்பெயரை ஏற்படுத்தி வரும் தங்கள்  செய்கைகளை முருகன் காலடியில் தொலைத்து விட்டு மேன்மக்களாக திரும்புகின்றனர்.

கடந்த கால தீவினை களால் தவறான பாதையில் உழன்று முருகனின் வழிகாட்டுதலால் நேர்வழிக்கு திரும்பி செம்மையாக வாழ்ந்தவர்கள் பலர். இன்னும் ஒரு தரப்பி னரோ பாதயாத்திரை பக்தர்களுக்கு செய்யும் சேவை முருகனுக்கே சென்றடைவதாகக் கருதி பல்வேறு காரியங்களை  செய்கின்றனர். இதற்காக பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம், இலவச மோர், அவர்கள் வரும் பாதையை சுத்தம் செய்தல் உள்ளிட்ட நேர்த்  திக்கடனையும் மேற் கொள்கின்றனர். எப்படியோ... வேண்டி யவர்களுக்கு வேண்டிய வரம் தந்து பக்தர்களை அரவணைத்துக் கொண்டு, எல்லையில்லா  மகிழ்ச்சி அளிப்பதில் முருகன் ஒரு கலியுக வரதனாக திகழ்கிறான்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-04-2019

  24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • vote

  3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

 • hailstrom

  தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

 • bookday

  இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

 • ukraine

  உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்