SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாவவினைகள் தீர்க்கும் பாதயாத்திரை வழிபாடு

2015-02-03@ 12:08:33

தைப்பூச முருகனைக் காண பக்தர்கள் காவியுடை அணிந்து, விரதம் இருந்து பலநூறு மைல்கள் பனி, வெயில் பாராது நடந்து வருகின்றனர். குறிப்பாக  காரைக்குடியைச் சுற்றியுள்ள செட்டிநாட்டுப் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக ஆறுமுகக் காவடி சுமந்து வந்து காணிக்கை செலுத்தி வழிபட்டுச்  செல்கின்றனர். தை மாதம் பிறந்தால், பழநி நகரில் முருகா முருகா, அரோகரா அரோகரா என்ற முழக்கம்தான். ஆட்டம், பாட்டம் மிகுதி. பழநியைச்  சுற்றியுள்ள மண்டபங்களில், கிரிவீதியில் மற்றம் சண்முகாநதியில் பக்தர்களின் காவடி ஆட்டம் மிகுதியாய் உள்ளது. நத்தம், மதுரை, திண்டுக்கல்,  திருச்சி, ஜெயங்கொண்டம் போன்ற நகரங்களில் இருந்து பக்தர்கள் சேவல் காவடிகள், மயிற்காவடி, வேல்காவடி, ஆறுமுகக் காவடிகள் சுமந்து  வருகின்றனர்.

பாதயாத்திரையால் தங்களின் பாவ வினைகள் நீங்குகின்றன என்று பக்தர்கள் நம்புகின்றனர். பழநி தைப்பூச விழாவில் பாதயாத்திரை சிறப்பான  இடத்தைப் பெற்று விளங்குகின்றதை அறியமுடிகின்றது. வழிநடையாய் பக்தர்கள் நடந்து வருகின்ற பொழுது, முருகன் தங்களுடன் நடந்து வருவதாய்  பக்தர்கள் கூறுகின்றனர், நம்புகின்றனர். கந்தா, கடம்பா, கதிர்வேலா என்று உணர்ச்சி ததும்பச் சொல்லி கடும் குளிர், பனி, வெயில் கருதாது பக்தர்கள்  பழநியை நோக்கிப் பாதயாத்திரையாய் வருகின்றனர்.

பாதயாத்திரையாய் பழநிக்கு ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு மேலாக பக்தர்கள் வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களில்  இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் விரதம் இருந்து தைப்பூச முருகனைக் காண வருகின்றனர். தைப்பூசத் திருவிழா - மனக்கட்டுப்பாட்டையும் உடல் கட்டுப்பாட்டையும், ஒழுக்க நம்பிக்கையும் பக்தர்களுக்கு ஏற்படுத் துகின்றது என்று கூறலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

  • holifestivel

    வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்