பழநி தைப்பூச பாதயாத்திரை மகிமைகள்

Date: 2015-02-03@ 11:58:45

பழநி உலகப்புகழ் பெற்ற புண்ணிய திருத்தலம். தென் இந்தியாவில் ஒப்பற்ற திருத்தலம் பழநி. இத்திருத்தலத்தில் ஆண்டு தோறும் பல விழாக்கள்  நடைபெற்று வருகின்றது. குறிப்பாக தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய இரண்டு திருவிழாக்களும் சிறப்புக்குரிய விழாக்கள். பழநி தைப்பூசத்தில்  பாதயாத்திரை சிறப்பிடம் பெறுகின்றது. தைப்பூசம் என்பது தைமாதம் முருகப் பெருமானுக்கு நடைபெறும் திருவிழாவாகும். தைப்பூசம் விளக்கம் தை  பிறந்தால் வழி பிறக்கும் என்ற நிலையில் தைமாதம் பிறந்துவிட்டால் பழநி நகரில் வெற்றிவேல், வீரவேல், கந்தனுக்கு அரோகரா, கடம்பனுக்கு  அரோகரா, வேல் வேல், வெற்றிவேல் என்ற பக்திப் பரவசக் குரல்கள் முருக பக்தரல்களிடம் ஒலித்துக் கொண்டே இருக்கும். இங்கு காவி உடையும்,  கழுத்தில் ருத்திராட்சை மாலையும் அணிந்து கொண்டு கடும் குளிர், பனி, வெயில் பாராது பாதயாத்திரையாய் தங்களது தோளில் ஆறுமுகக்  காவடியைச் சுமந்து கொண்டு வருகின்ற முருக பக்தர்கள் ஏராளம்.

தைப்பூசம் என்பது தைமாதம் பூச நட்சத்திரத்தோடு நிறைந்த முழுமதி கூடும் மங்கள நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் வெற்றி விழா ஆகும்.  தைப்பூச நாளில் முருகனைக் கண்டு தரிசித்தால் தரித்திரம் விலகும். இழந்த சக்திகளைப் பெறலாம் என்பர். இந்நாளில் தான் முருகப் பெருமானின்  அன்னையாகிய உமாதேவியார் முருகனுக்கு வெற்றிவேல் எடுத்துக் கொடுத்து தாரகன் என்ற அசுரனை அழித்து வெற்றிவாகை சூடிய நாள். முருகனின்  வெற்றியைக் கொண்டாடும் விழா முருகனின் வெற்றிக்குரிய பூசம் தைப்பூசம். தைப்பூசத் திருவிழா பழநியில் பெரியநாயகி அம்மன் கோயிலில்  கொடியேற் றத்துடன் இவ்விழா தொடங்கு கிறது. தைப்பூசத் தைக் காண பல இலட்சம் மக்கள் பாதையாத் திரையாய் பழநியை நோக்கி வருகின்றனர்.

is there a cure for chlamydia phuckedporn.com home std test

Like Us on Facebook Dinkaran Daily News