குன்றக்குடியில் தேரோட்டம்

Date: 2015-02-03@ 11:57:09

காரைக்குடி, : தைப்பூசத்தை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தேரோட்டம் நடந்தது. காரைக்குடி அருகே குன்றக்குடி  சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச விழா கடந்த 24ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அதை தொடர்ந்து 25ம்  தேதி கொடியேற்றமும், வெள்ளிகேடகத்தில் வீதி உலாவும், பின்னர் 1 ம் தேதி வரை வெள்ளிகேடகம், வெள்ளி ரதம், தங்க ரதம் உள்பட பல்வேறு  வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்தது.

இந்நிலையில் நேற்று காலை 6.15க்கு சுவாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 3.30க்கு தேரோட்டமும் நடந்தது. இரவு 8 மணிக்கு  வெள்ளிக் கேடகத்தில் வீதி உலா நடந்தது. தைப்பூசத்தை முன்னிட்டு இன்று காலை 11 மணிக்கு வெள்ளிகேடத்தில் வீதி உலா, தீர்த்தவாரியும்,  மாலை 6 மணிக்கு தீபாரா தனையும் நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகள் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் செய்யப்பட்டிருந்தன.  விழாவில் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Like Us on Facebook Dinkaran Daily News