SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாகம் தீர்த்த தலம்

2015-02-03@ 11:51:56

முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாக கருதப்படும் மருதமலையில் எழுந்தருளியிருக்கும் எழில் முருகனின் சுடர் முகத்தை தரிசிப்பவர்களின்  வாழ்வில் வளம் பெருகும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. கோயிலின் வலது புறம் தல விருட்சமாகிய மருதமரம் உள்ளது. மருதமலை என  பெயர் உருவானதற்கு மருதமரம் ஒன்றாக கருதப்படுகிறது. முருக கடவுளின் மீது அளவிலாத பக்தி கொண்ட முனிவர் ஒருவர் கானகமாய் அடர்ந்து  கிடந்த இந்த பகுதியில் பல ஆண்டுகளாக தவம் மேற்கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு அளவில்லாத தாகமும், அசதியும் ஏற்பட்டு  மயங்கினார். அப்போது மருதமரத்தின் அடிப்பகுதியில் இருந்து நீர் ஊற்று பொங்கி எழுந்தது. பிறகு அவரை குளிர்வித்து, மயக்கத்தை நீக்கி, தாகத்தை  தணித்து புத்துயர் அளித்தது.

அந்த மரம் மருதமரம் என்பதாலும், அதிலிருந்து ஜலம் பொங்கி வந்ததால், மருதாஜலம் என அந்த முனிவர் ஆனந்தம் கொண்டு, பாடித்துடித்தார்.  இதனால் இந்த இடம் மருதாஜலம் ஆனது என்பது ஐதீகம்.மருதாஜலம் நாளைடைவில் மருவி கோயிலை கொண்டுள்ள முருகப்பெருமானை மருதாசல  மூர்த்தியாக துதிக்கலானார் முனிவர். 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருமுருகன்பூண்டி கல்வெர்ட்டில் மருதமலை குறித்து குறிப்புகள்  காணப்படுகிறது. பேரூர் தலப்புராணத்தில் அபயபடலம், மருதவரை படலம், ஆகியவற்றில் மருதமலை பற்றிய சிறப்புகள் இடம் பெற்று உள்ளன. பதினெட்டாம் நூற்றாண்டில் மருதமலை என மக்கள் தங்களது குழந்தைகளுக்கு பெயர் சூட்டி, மகிழ்ந்து உள்ளனர். பேரூர் கோயிலின் சிற்பங்கள்,  தூண்கள் மருதமலையில் இருந்து கொண்டு செல்லப்பட்டதாக வரலாறு சான்றுகள் உள்ளன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-01-2019

    15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MakarSankrantiFestival

    வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

  • 14-01-2019

    14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-01-2019

    13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 12-01-2019

    12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்