SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா

2015-01-14@ 08:27:53

மானாமதுரை : மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் உலக ஜீவராசிகளுக்கு சிவன் பார்வதி சுவாமிகள் படியளக்கும் விழா கொண்டாடப்பட்டது. சிவன் கோயில்களில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று உலக ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா நடத்தப்படுகிறது. நேற்று மார்கழி அஷ்டமி திதியை முன்னிட்டு மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சிக்குப் பின் ஆனந்தவல்லி, சோமநாதருக்கு பன்னீர், பால், சந்தனம், திரவியம் உள்ளிட்ட 23 சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகளை அழகியசுந்தர பட்டர், தெய்வசிகாமணி பட்டர் தலைமையில் குருக்கள் செய்தனர்.

ரிஷப வாகனத்தில் சோமநாதர், பிரியாவிடை, ஆனந்தவல்லி அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளித்தனர். பின்னர் அஷ்டமி சப்பரத்தில் சோமநாதசுவாமி, பிரியாவிடையும், ஆனந்தவல்லியும் தனித்தனி சப்பரங்களில் சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளித்தனர். அலங்கரிக்கப்பட்ட சப்பரம் பாகபத் அக்ராஹாரம், பெருமாள் கோயில் வீதி, தெற்கு, வடக்கு உள்ளிட்ட நான்கு ரத வீதிகளில் உலா வந்தது. பக்தர்கள் சுவாமி வலம் வந்த பாதையில் எறும்பு உள்ளிட்ட ஜீவராசிகளுக்கு உணவாக அரிசி, நவதானியங்களை தூவினர். விழா ஏற்பாடுகளை கோயில் தேவஸ்தான கண்காணிப்பாளர் வேலுச்சாமி, மணிக்குமார் பட்டர், விழா கமிட்டி நிர்வாகி கண்ணன் செய்தனர்.

விழா உருவான கதை

சிவபெருமான் அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு படைக்கிறாரா என்பது குறித்து பார்வதி தேவிக்கு சந்தேகம் எழுந்தது. அவரை சோதிக்க எண்ணிய பார்வதி தேவி ஒரு மூடப்பட்ட பாத்திரத்தில் ஒரு எறும்பை பிடித்து சிவனுக்கு தெரியாமல் ஒளித்து வைத்திருந்தாராம். சிவனிடம், பார்வதி தேவி அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு அளித்தீர்களா என்று கேட்டுள்ளார். சிவனும் ஆமாம் என்று சொன்னாராம். உடனே தன் கையில் வைத்திருந்த பாத்திரத்தை காண்பித்து இந்த பாத்திரத்தில் ஒரு எறும்பு உள்ளது அதற்கும் அளித்தீர்களா என்று கேட்டாராம். பாத்திரத்தை திறந்து பார் என்று சிவன் கூறினார். திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த எறும்புக்கும் அரிசி மணிகள் உணவாக படைக்கப்பட்டிருந்ததாம். இதை நினைவுபடுத்தும் வகையில் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று படியளந்த நாள் கொண்டாடப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2019

    27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்