SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொளப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில்

2014-12-04@ 09:42:37

ஸ்தல வரலாறு :

போரூர்-குன்றத்தூர் செல்லும் வழியில் கொளப்பாக்கத்தில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவில் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இது சூரிய பகவான் அம்சமுடைய கோவில். சூரிய பகவானுக்கு இங்கு தனிச் சந்நிதி அமைந்துள்ளது.

இது அகஸ்திய முனிவர் வழிபட்ட சிவ தலமாகும். கிழக்கு நோக்கிய நிலையில் காசிவிசுவநாதர் ஸ்ரீவிசாலாட்சி சந்நிதிகள் அமைந்துள்ளன. ஸ்ரீசுப்ரமண்யருக்குப் பச்சைக்கல் மயில் வாகனத்துடன் கூடிய தனி சந்நிதி உள்ளது. இங்குள்ள காலபைரவர் மிகவும் பிரசித்தி பெற்றவர்.

ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை) காலபைரவருக்கு விசேஷ பூஜைகள், அபிஷேகம் நடைபெறும். தொடர்ச்சியாக ஆறு வாரம் ஞாயிற்றுக்கிழமை ராகு கால வேளையில் பூஜை செய்தால் நினைத்த காரியம் நிறைவேறுகிறது. கி.பி. 878-ல் ஆதித்யன் என்ற அரசன் இக்கோவிலைப் புதுப்பித்தான்.

முதலாம் ராஜராஜ சோழன் இரண்டாம் ராஜராஜ சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன், சுந்தரபாண்டியன், வீரராஜேந்திர சோழன், தெலுங்கு சோழ மன்னன் விஜயகாந்த கோபாலன் ஆகியோர் இந்தக்கோவிலுக்கு மானியங்கள் அளித்து உள்ளனர். ஸ்ரீவிஜய மகாராஜா (சுமித்திராத் தீவு) 250 குழி நிலத்தை இந்தக் கோவிலுக்கு அளித்துள்ளார்.

பிரதோஷம், சிவராத்திரி காலங்களில் வெளியூரிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த கோவிலுக்கு வருகிறார்கள். போரூர் ரவுண்டானாவிலிருந்து குன்றத்தூர் செல்லும் பேருந்தில் பாய்கடை என்று கேட்டு இறங்கவும். அங்கிருந்து ஒன்றரை கி.மீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • perufloodrain

  பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • himachal

  இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

 • navamkolumpu

  கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

 • araliparaijallikattu

  அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

 • dakkafire

  வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்