வித விதமாய் அபிஷேகம்

Date: 2013-12-11@ 16:00:48

அபிஷேகத்தினால் இறைவன் குளிர்ந்து ஆசிர்வதிப்பான் என்பது புராணங்களின் கருத்து. சில தலங்களில் வித்தியாசமான அபிஷேகங்கள் இறைவனுக்கு செய்யப்படுகின்றன. அவற்றில் சில:
கொடுங்கல்லூர் பகவதி அம்மன் தவிடு அபிஷேகம் மேற்கொள்கிறாள்.

திருப்புறம்பியம் பிரளயங்காத்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் ஒரு குடம் தேன் அபிஷேகம் செய்கிறார்கள்.

தில்லைக்காளிக்கு நல்லெண்ணெயால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.

திருச்சூர் வடக்கு நாத சுவாமிக்கு தினசரி நெய்யால் மட்டுமே அபிஷேகம்.

எப்போதும் அருவியின் ஓசை கேட்டுக் கொண்டே இருப்பதால் குற்றாலநாதருக்கு தலைவலி வராமல் இருக்க இவருக்கு தைல அபிஷேகம்.

திருவாரூர் மாவட்டம் பொன்னிலை அகஸ்தீஸ்வரருக்கு பங்குனி உத்திரத்தன்று நெல்லிப்பொடியால் அபிஷேகம் செய்கிறார்கள்.

சென்னை குரோம்பேட்டை செங்கச்சேரி அம்மனுக்கு பௌர்ணமியன்று மருதாணி இலையால் அபிஷேகம்.

திருப்பழனம் பழனத்தப்பர், ஐப்பசி பௌர்ணமி நாளன்று காய்கறி அபிஷேகம் ஏற்கிறார்.

திருநெய்த்தானம் நெய்யாடியப்பருக்கு நெய் அபிஷேகம் செய்தபின்பு இளவெந்நீரால் அபிஷேகம் நடக்கிறது.

தஞ்சை பெரிய கோயில் நந்திக்கு மிளகாய் அபிஷேகம் நடத்தப்படுகிறது.

தருமபுரி ஹரிஹரநாதகோயில் அருகே உள்ள அனுமனுக்கு தினமும் காலையில் தேன் அபிஷேகம் செய்கிறார்கள்.

உறையூர் வெக்காளி அம்மனுக்கு வைகாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமைகளில் மாம்பழங்களால் அபிஷேகம் விமரிசையாக நடத்தப்படுகிறது.

சென்னிமலை முருகனுக்கு தயிரால் அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. அந்த தயிர் புளிப்பதில்லை என்பது அதிசயம்.

Like Us on Facebook Dinkaran Daily News