SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவாரூர் கோயிலில் திருவாதிரை திருவிழா

2013-12-18@ 12:32:11

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் இன்று திருவாதிரை திருவிழா விமரிசையாக நடைபெற்றது. தியாகேச பெருமானுக்கு நேற்று மாலை முசுகுந்த சகஸ்ரநாம  அர்ச்சனையும், இரவு 10மணி அளவில் சுவாமிக்கு திருவாதிரை மகா அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு  அபிஷேகம் நடந்தது. காலை 6 மணி முதல் தியாகராஜ பெருமான் பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சியும், 7மணி அளவில்  நடராஜபெருமான் தரிசனமும் நடந்தது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 4 மணி முதல் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம்  செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் உள்துறை கட்டளை பரம்பரை அறங்காவலர் தியாகராஜன் மற்றும் உதவி ஆணையர் ரத்தினவேல், செயல்  அலுவலர் ஜெயக்குமார் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர். விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது. 3ம் பிரகாரத்தில்  அமைந்துள்ள நடராஜர் சன்னதியில் 4 மணிக்கு சுவாமிக்கு சந்தனம், பால், பண்ணீர் அபிஷேகங்கள் நடந்தது. 5 மணிக்கு திரைவிலகும் நிகழ்ச்சிகள் துவங்கியது.  முதலாவதாக கணபதி பூஜை செய்து மூலாதாரம் திரை விலக்கப்பட்டது. பின் பிரம்மா, சரஸ்வதி, பூஜை செய்து வசதிஷ்டானம், மகாலெட்சுமி, விஷ்ணு பூஜை  செய்து அஞ்சை திரை விலக்கப்பட்டது. பின் மகாலெட்சுமி, கன்னிகா பூஜை செய்து அனைத்து திரைகளும் விலக்கப்பட்டு நடராஜர் ஆருத்ரா தரிசனம் தந்து  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்த மாணிக்கவாசகர் எதிர்சேவை செய்து நடராஜரின் ஆருத்ரா தரிசனத்தை கண்டார். தொடர்ந்து  நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் ஆருத்ரா தரிசனத்தை கண்டுகளித்தனர்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இலவச பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-01-2017

    21-01-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • afDSTADuimSTUDraileINformbull

    ஜல்லிக்கட்டு நடத்தகோரி புதுச்சேரி ஏஎப் டி மைதானத்தில் மாணவர்கள் காளை வடிவில் அணிவகுத்து நின்றனர்

  • CHILdreanSUPPORTAJAILKATTU

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தைகளின் புகைப்படங்கள்

  • marinASTRATed300POERpleNOWbecomeTRE

    மெரினாவில் 300 பேருடன் தொடங்கிய பேராட்டம் : தற்போது ஆலமர விழுதுகளாய் படர்ந்து நிற்கும் இளைஞர் பட்டாளம்

  • auto_lorry_jallikattu

    ஜல்லிக்கட்டு - தமிழகம் முழுவதும் முழு கடை அடைப்பு ; லாரிகள் , ஆட்டோக்கள் ஓடவில்லை