SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிவனார் தோற்றுவித்த காமன் பண்டிகை

2013-12-11@ 16:00:48

திருக்குறுக்கை என்ற தலத்தில் யோக நிலையில் வீற்றிருந்த சிவபெருமானை நோக்கி மன்மதன் மலர்க் கணைகளை எய்தான். யோகம் கலைந்த சிவன் மலர்க் கணைகள் வந்த திசையை நெற்றிக்கண்ணால் நோக்கினார். அவ்வளவுதான், மன்மதன் எரிந்து சாம்பலாகினான். கணவனை இழந்த ரதி திருவையாற்றிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள திருநல்லூர் தலத்தில் வீற்றிருக்கும் கர்கடேஸ்வரரை தனது கணவர் உயிர்பெற்று எழ வரமருளுமாறு வேண்டினாள். சிவனது அருள் பார்வையால் ரதியின் கோரிக்கை நிறைவேறியது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பௌர்ணமி தினத்தில் இங்கு காமன் பண்டிகை சிறப்பாக நடைபெறுகிறது. இரண்டு துண்டாக வெட்டிய ஆமணக்கு செடியை நட்டு வழிபாடு நடத்துகிறார்கள். எட்டு தினங்களுக்குள் அச்செடி மீண்டும் துளிர்விட்டு தழைப்பது அதிசயம்.
- எஸ்.பக்கிரிசாமி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்