SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘‘கோவிந்தா, உறியடியோ கோவிந்தா...’’

2013-12-11@ 16:00:48

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை உறியடித் திருவிழாவாக கொண்டாடிய முதல் திருத்தலம் வரகூர். இவ்வூர் தஞ்சாவூரில் இருந்து 24 கி.மீ. தூரத்தில் கண்டியூர்-திருக்காட்டுப்பள்ளி  சாலையில் இருந்து 1 கி.மீ. தென்புறம் அமைந்துள்ளது. நாராயண தீர்த்தர் அவதரிப்பதற்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாது, திருமலையில் இருந்து வேங்கடேசப் பெருமாளையும் உபயநாச்சியாரையும் எடுத்துக் கொண்டு யாத்திரை புறப்பட்டார். பூபதிராஜபுரத்தில் (இப்போதைய வரகூர்) தங்கி விக்ரகங்களை வைத்து ஆராதனை செய்தார்.  பிறகு யாத்திரையை தொடர எண்ணி விக்ரகங்களை எடுக்க முயன்றபோது அவற்றை அசைக்கக் கூட முடியவில்லை. அப்போது ‘‘எமக்கு உகந்த  இடம் இது.

இங்கிருந்து எடுத்துச் செல்ல வேண்டாம்’’ என்று அசரீரி கேட்டதாம். அதன்படி சாதுவும் விட்டுவிட்டு சென்றாராம். லட்சுமி நாராயணர்  மூலவராக கோயில் கொண்டுள்ள இடத்தில் வேங்கடேசரையும் உபயநாச்சியாரையும் உற்சவராக நாராயண தீர்த்தர் வைகாசன ஆகம விதிப்படி பிர திஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பாக ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரி (பானக நரசிம்மர் தலம்) என்ற ஊரில் கங்காதரன்-பார்வதி தம்பதிக்கு மகனாக பிறந்து, கோவிந்தன் என்ற பெயரில் வளர்ந்து வந்தார், நாராயண தீர்த்தர். குழந்தை பருவத்திலேயே கிருஷ்ணரிடம் தீராத பக்தி  கொண்டார். வாசுதேவ சாஸ்திரிகளின் சீடனாகி, பாகவதம், இசை, நடனம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார்.

காசியில் சிவராமானந்த தீர்த்தரிடம் சந்நி யாசம் பெற்று நாராயண தீர்த்தர் என்ற திருநாமம் கொண்டார். புண்ணிய க்ஷேத்திரங்களை தரிசித்தபடி திருப்பதியை அடைந்தபோது அவருக்கு தீராத  வயிற்று வலி ஏற்பட்டது. திருமலை வாசனை மனமுருக வேண்டிய அவரது கனவில் இறைவன் தோன்றி காவிரி தீரத்தில் உள்ள தனது வாசஸ்தலத் திற்கு வந்தால் விடை கிடைக்கும் என்று கூறி மறைந்தார். அவ்வாறே தீர்த்தர் திருவையாறு அருகே நடுக்காவேரி வந்து இரவு தங்கினார். தீர்த்தரின்  கனவில் பகவான் தோன்றி, ‘‘நாளை காலை எழுந்தவுடன் உன் முன்னால் தோன்றும் மிருகத்தை தொடர்ந்து செல், அது மறையும் இடத்தில் நீ எ ன்னைக் காணலாம்’’ என்று அருளினார்.

மறுநாள் காலை அவர் முன் தோன்றிய வெண்ணிற வராகத்தை (பன்றியை) தொடர்ந்து சென்றார். அது வரகூர் கோயிலுக்குள் சென்று மறைந்தது. பக வானை உணர்ந்த தீர்த்தர் லட்சுமி நாராயண பெருமாளின் முன்பு ஏழுநாட்கள் உபவாசத்துடன் தியானத்தில் அமர்ந்தார். 8வது நாள் மாசி மாத கி ருஷ்ணாஷ்டமி, ரோகிணி தினத்தில் லட்சுமி நாராயணர் சங்கு, சக்ர, அபய, வரத கரங்களுடன் ஸ்ரீநிவாசனாக நாராயண தீர்த்தருக்கு காட்சி கொடுத் தார். தீர்த்தரின் உள்ளம் பூரித்து விம்மியது. உடனே அவரிடமிருந்து ‘‘ஸ்ரீவராக புரிவேங்கடேச ஸ்துதி’’ பிரவாகமாக வெளிப்பட்டது.

‘‘ஜய ஜய வராஹபுர வேங்கடேச’’ என்ற லயங்களுடன் பாடல்கள் பக்தி வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது. கிருஷ்ணாவதாரத்தில் இறைவனின்  லீலைகளை அழகான ஸ்லோகங்களாக இசை, நடனம், தாளம் யாவும் அமையப்பெற்று தேவகி-வசுதேவர் திருமணம் தொடங்கி, கிருஷ்ணன்-ருக்மணி  கல்யாணம் வரையில் பாகவத்தின் தசம ஸ்காந்தங்களை 145 பாடல்களில் ‘‘ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி’’ யாக பாடி முடித்தார். அப்போதே அவரது  வயிற்று வலியும் நீங்கியது. பகவான் நாராயணன் அவரது தரங்கிணியை நடனம் புரிந்து அங்கீகரித்தார்.

ஆஞ்சநேயர் நடன ஒலிக்கேற்ப தாளம் போடுகிறார். குருவாயூரில் நாராயண பட்டத்திரிக்கு அருள்பாலித்த கண்ணன், வரகூரில் நாராயண தீர்த்தருக்கு நடனமே ஆடி தரங்கிணியை ஏற்ற அற்புதம் நிகழ்ந்தது. தனது இறுதி காலம் வரை வேங்கடேச பெருமாளை பூஜித்து, பஜனை வழி முறைகளை தோற்றுவித்து, தரங்கிணி பாடல்களை பாடி, ‘உறியடி’ என்ற கிருஷ்ண ஜன்மாஷ்டமி திருவிழாவையும் தோற்றுவித்தார், நாராயண தீர்த்தர். ஆண்டுதோறும் ஆவணி மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் 10 நாட்கள் ‘சிக்யோத்ஸவம்’ என்னும் உறியடித் திருவிழா வரகூரில் நடைபெறும்.

முதல்நாள் உறியடி மரம் ஏற்றும் நிகழ்ச்சியும் மறுநாள் தொடங்கி நாள் தோறும் இரவு முறையே ராஜாங்க சேவை, வேணுகோபாலன், காளிங்க நர்த் தனன், உறியடிக்கும் கிருஷ்ணர், பார்த்தசாரதி, சயன ரங்கநாதர், ராதாகிருஷ்ணர், யசோதாகிருஷ்ணர் ஆகிய அலங்காரங்களில் அருள்பாலிப்பார்.  தினந்தோறும் காலை வேதபாராயணம், ஸ்ரீபாகவத சப்தாக பாராயணம், மாலையில் பல்வேறு  வித்வான்கள் பங்கேற்கும் பஜனை ஆகியவை நடைபெறும். உறியடித் திருநாளில் காலை வெண்ணைத்தாழி அலங்காரத்தில் பல்லக்கில் புறப்பட்டு வேத பாராயணம், பஜனையுடன் வீதி உலாவாக கருங் கால் நதிக்கரையில் உள்ள
மண்டபத்தில் எழுந்தருளுவார் பகவான்.

மாலை 7 மணிக்கு சிவனுக்குரிய மஹந்நியாச ஜபம் கூடிய நான்கு வேதங்களை அந்தணர்கள் ஓத, விசேஷ திருமஞ்சனம் நடைபெறும். சிறப்பான புஷ்ப,
ஆபரண அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை முடிந்து, வேதகோஷங்களுடன் இரவு 12 மணிக்கு ஸ்ரீதேவி-பூதேவி சமேத வேங்கடேச
பெருமாளின் புறப்பாடு நடைபெறும். அது சமயம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்தபடியே பின்னால் வருவார்கள். ‘‘வேங்கட்
ரமணா கோவிந்தா, ஸ்ரீநிவாசா கோவிந்தா, உறியடியோ கோவிந்தா’’ என்று பக்தர்கள் கோஷமிட்டுவர இறைவனைத் தாலாட்டும் பாணியில்
(ஒய்யாளி) ஆடி, அசைந்து வரும் அந்த அற்புதக் காட்சியைக் காணக் கண்கள் ஆயிரம் வேண்டும்.

இடையர்கள் போலும், சப்பாணிகள் போலும் தரையில் உட்கார்ந்தும், நகர்ந்தும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை செலுத்துவார்கள். பின்னர்  கோயில் முன்பாக அமைக்கப்பட்ட அலங்கார பந்தலில் சுவாமி எழுந்தருளுவார். பின்னர் உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் என்று இளைஞர்கள்  பங்கேற்று பிரசாதங்களை வழங்குவார்கள். பின்னர் அதிகாலை சுவாமி கோயிலுக்குள் பிரவேசித்து 6 பிரதட்சிணங்கள் வர, திருவந்திக் காப்பு,  கோணங்கி, ஏகாந்தசேவை தீபாராதனை நடைபெறும்.

மறுநாள் காலை ருக்மணி கல்யாணம், அடுத்தநாள் பக்த உற்சவமாக ஆஞ்சநேயருக்கு அலங் கார ஆராதனைகள் நடைபெறும். இந்த விழாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டு தோறும் இங்கு கூடுவர். வரும் பக்தர்கள் அனைவ ருக்கும் அன்னதானம் அளிக்கப்படுகிறது. இவ்வூரில் பிறந்தவர்கள் தாங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் இறைவனுக்கு சேவை செய்ய உறியடி நாளில் இங்கு வந்துவிடுவார்கள். வேலை கிடைத்து செல்லும் இளைஞர்கள் தங்கள் முதல்மாத சம்பளத்தை காணிக்கையாக உண்டியலில் செலுத்துகிறார்கள்.

ஆலயத்  தொடர்புக்கு: 98421 52113.

வி.கிருஷ்ணமூர்த்தி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 31-05-2020

  31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 30-05-2020

  30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்