SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சங்கரபீடத்தில் அருளும் சாரதாம்பிகை

2013-12-11@ 16:00:48

கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் உள்ளது புகழ்பெற்ற சிருங்கேரி சாரதாவின் ஆலயம். துங்கை ஆற்றின் அருகே சாராதாதேவியை பிரதிஷ்டை செய் தார், ஆதிசங்கரர். சிவபெருமான் தனக்குப் பிரசாதமாகத் தந்த ஸ்படிகலிங்கமாக விளங்கும் சந்திரமௌலீஸ்வரரையும் ரத்தின கர்ப்பகணபதியையும்  முதல் பீடாதிபதி சுரேசுவரரிடம் கொடுத்து பூஜை செய்துவரக் கூறினார். இந்த ஸ்படிக லிங்கத்திற்குக்கே இன்று வரை பீடாதிபதிகள் பூஜை செய்து வரு கின்றனர். சரஸ்வதிதேவியே இங்கு சாரதாதேவியாக திருவருள்பாலிக்கிறாள்.

ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்தில் சாரதாதேவியை பிரதிஷ்டை செய்திருப்பதால் இவளே பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியாகத் திகழ்கிறாள். இவளை வேண்டி னால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. குழந்தைகளை பள்ளியில்  சேர்க்குமுன் இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பு. ஆதிசங்கரர் இங்கு மூகாம்பிகையை, சரஸ்வதியாக பாவித்து வணங்கி, ‘கலா ரோகணம்’ பாடி அருள் பெற்றார். சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதி சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அன்று குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்காக வித்யாரம்ப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கிறது.

- ரஞ்சன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்