SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

படிப்பறிவு தரும் பஸாரா சரஸ்வதி

2013-12-11@ 16:00:48

ஆந்திரபிரதேசம் ஆதிலாபாத்தில் உள்ள பஸாராவில் பிரசித்தி பெற்ற சரஸ்வதி ஆலயம் உள்ளது. நமது நாட்டில் சரஸ்வதி தேவிக்கென அமைந்து ள்ள மிகச் சில கோயில்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள கோயில் கருவறையில் ஞானசரஸ்வதி தேவி வீணை, அட்சமாலை, ஏடு தாங்கி அருள்புரிகி றாள். இவள் அருகிலேயே மகாலட்சுமி காட்சி தர, மகாகாளி தனிச் சந்நதியில் ஆலயப் பிராகாரத்தில் வீற்றிருக்கிறாள். மாணவ-மாணவியர்கள் கல் வியை ஆரம்பிக்கும் முன் இங்குள்ள ஞான சரஸ்வதியை வழிபட்டுச் செல்கின்றனர்.

இங்கு முப்பெரும் தேவியர் இருப்பினும் பிரதானமாக வணங்கப்படுபவள் ஞான சரஸ்வதி தேவியே! இவளை வணங்க கல்வியும் ஞானமும் கைகூடு கின்றன. சரஸ்வதி தேவி சிலை மீது எப்போதும் உள்ள மஞ்சள் காப்பே பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைச் சிறிதளவு உண்டால்  கல்வித் திறன் அதிகரிக்கும். பக்தர்கள் சரஸ்வதிக்கு அபிஷேகம் செய்து வெண் பட்டு உடுத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வியாச முனிவருக்கு முப்பெருந்தேவியரின் அம்சமாகக் காட்சிக் கொடுத்து, குமராஞ்சலா மலைப்பகுதியில் தேவி ஆவிர்பவித்தபடியால், இந்த ஞான சரஸ்வதிதேவிக்கு கௌமாராச்சல நிவாஸினி என்னும் திருநாமமும் உண்டு.

இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் இந்த தலத்துக்கு வந்து வழிபடுகின்றனர். ஆரம்பக் கல்வி பயிலவிருக்கும் குழந்தைகளை இங்கே அதிக எண்ணிக்கையில் காணலாம். குறிப்பாக சரஸ்வதி பூஜை நாளன்று  இந்த ஆலயம் விழாக்கோலம் கொள்கிறது. பக்தர்கள் தேவியையும் அருகே குகையிலுள்ள வியாச பகவானையும் வழிபடுகின்றனர். இதே ஊரில் தத்தாத்ரேயருக்கும் ஆலயம் இருப்பதால், இது, ‘தத்ததாம்’ எனவும் அழைக்கப்படுகிறது. சிருங்கேரி மடம், ஸ்ரீந்ருஸிம்ம பாரதி சுவாமி கள், 14ம் நூற்றாண்டில் பாத யாத்திரையாக இங்கு வந்த போது தத்தாத்ரேயரை பிரதிஷ்டை செய்தாராம். இந்த தத்தாத்ரேயரை வணங்க ஞானம்  கைகூடுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்