SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : ஜூலை 6 முதல் 12 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பம், நட்பு வகையில ஏற்பட்டிருந்த உரசல், விரிசலெல்லாம் நீங்கிடுமுங்க. ஆனா, பிள்ளைகளோட நடவடிக்கைகள்ல மட்டும் கொஞ்சம் கவனமா இருங்க; மென்மையா அறிவுரை சொல்லுங்க; கேட்டுப்பாங்க. புதுசா வேலை தேடறவங்களுக்கு அந்த முயற்சி மனநிறைவான வெற்றி தருமுங்க. படிச்ச படிப்புக்கேத்த வேலைன்னா கூடுதல் சந்தோஷம்தானே! ஏதேனும் வழக்கு நிலுவையில் இருந்தால், அது உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகுமுங்க. உத்யோகத்ல இருக்கறவங்களுக்கும் நன்மை மிகுந்த காலகட்டமுங்க. உங்க திறமையால சாதனைகள் படைப்பீங்க. நல்ல சர்வீஸ் போட்டும் தடைப்பட்டிருந்த பதவி, ஊதிய உயர்வு, சலுகைகள் எல்லாம் உடனே கிடைக்குமுங்க. ரத்த நாளத்ல பாதிப்பு தெரியுதுங்க; ரத்தப்பரிசோதனை செய்துக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு மன இறுக்கம் விலகும், தைரியம் பிறக்குமுங்க. புற்றுள்ள அம்மன் கோயிலுக்குப் போங்க; அம்மன் பாடல்கள் பாடுங்க. புது உயரம் போவீங்க.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதிர்ப்பைக் கோபமாகத்தான் காட்டணுங்கறது இல்லீங்க. உங்க தரப்பிலே நியாயம் இருக்கற பட்சத்திலே மென்மையாகச் சொல்லி, அதேசமயம் உங்க கருத்திலே உறுதியா நிற்கவும் செய்யலாமுங்க. குறிப்பா வாழ்க்கைத் துணையோடு ஏற்படற வாக்குவாதத்தை ஜன்மப் பகையா நினைச்சுக்காதீங்க. எதையும் நிதானமா அணுகினா, வெற்றிகள் தாமே வந்து சேருமுங்க. இதை பல அனுபவங்கள்ல நீங்க உணர்ந்திருந்தாலும் திடீர்னு ஏற்படற கோபம், அதை மறக்கடிச்சுடுதுங்க. மற்றபடி உத்யோகம், வியாபாரம், தொழில் எல்லாம் பல நன்மைகளைத் தருமுங்க. தேவையான கடன் வாங்கி, சுபநிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்துவீங்க. வயிற்றில் ஏற்கெனவே பிரச்னை இருக்கறவங்க முறையாக மருத்துவப் பரிசோதனை செய்துக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் சிலர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீங்க. துர்க்கையை வழிபடுங்க; துர்க்கை அஷ்டோத்திரம் சொல்லுங்க. துன்பமெல்லாம் தொலைந்து போகும்.
 
3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சிலருக்கு கூடுதல் சம்பளம், சலுகைகள், வசதிகளோடு கூடிய வேறு வேலை கிடைக்கக்கூடிய வாய்ப்பும் கிட்டலாம். இந்தப் பலன்களுக்கு உங்களோட இனிமையான பேச்சுதான் முக்கிய காரணமுங்க. புது உறவுகள், நட்புன்னு சேருமுங்க. பொது நிகழ்ச்சிகள்லேயோ, குடும்ப விசேஷங்கள்லேயோ உருவாகிற முதல் சந்திப்பு, தொடர்வது இப்போதும், எதிர்காலத்துக்கும் நன்மைகளைத் தருமுங்க. இது கல்யாணம் மாதிரியான குடும்ப பிணைப்பாகவும் இருக்கலாம்; தொழில், வியாபார முன்னேற்றத்துக்கான வலுவான நட்பாகவும் இருக்கலாம். காது, மூக்கு, தொண்டை பகுதிகள்ல பிரச்னை வரலாமுங்க. சிலருக்கு ஒவ்வாமையால ஏற்படற சிறு சளித் தொந்தரவும் பெரிதாகலாம்; கவனமா இருங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு கேளிக்கை சந்தோஷமும் புதிய பொருள், ஆடை ஆபரண சேர்க்கையும் கிட்டுமுங்க. ஆஞ்சநேயரை வழிபடுங்க. அனுமன் சாலீஸா படிங்க. ஆனந்தம் உங்க சொத்தாகும்.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உணவுக் குழாய் கோளாறு. எதுக்களிப்பதுன்னு உபாதைகள் தெரியறதால உணவு விஷயத்ல கட்டுப்பாடு அவசியம் தேவைங்க. ஏற்கெனவே ஈரல் பிரச்னை இருக்கக்கூடியவங்க மருத்துவர் யோசனையைத் தட்டாதீங்க. முழு அக்கறையோட மேற்கொள்ற எல்லா விஷயங்களும் வெற்றிகரமாக முடியுமுங்க. தொட்டது துலங்கும்னு சொல்வாங்களே, அதுதான். அதே சமயம், பிறரோட அந்தரங்க விஷயங்கள்ல எந்த அக்கறையும் காட்டாதீங்க. அந்த பிரச்னைகள்ல உங்களால உதவ முடியாதுங்கறதைவிட, உங்களோட வம்பு ஆர்வத்ல அவங்களுக்குக் கூடுதலாக சிக்கல்கள் உண்டாகலாமுங்க. அப்படித் தலையிடு வதால சிலருக்கு அவமானமும் ஏற்படலாமுங்க; எச்சரிக்கையா இருங்க.

இந்தத் தேதிப் பெண்கள் உறவுக்காரங்ககிட்டேயும், அண்டை, அயலாரிடமும் மனசில் பட்டதை அப்படியே சொல்லிடாதீங்க; உங்களுக்குதான் அபவாதம் வரும். பெருமாளை வழிபடுங்க; கோவிந்த நாமாவளி சொல்லுங்க. கோலாகலமாக வாழுங்க.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தொழில், வியாபாரத்ல பெரிதாக சுணக்கம் எதுவும் தெரியலீங்க. போட்டிகள் இருந்தாலும் சந்தை தேவைகளைத் தெரிஞ்சுகிட்டு ஈடுபடறதால லாபம்தான் அதிகரிக்குமுங்க. உத்யோகத்ல சக பெண் ஊழியர்கள்கிட்ட உரிமை எடுத்துகிட்டுப் பழகாதீங்க; உங்க விளையாட்டுப் பேச்சு பெரிய பிரச்னைக்கும் வழிவகுக்கலாம். எந்த ஆறுதலுக்காகவும் யார் உதவிக்காகவும் உங்களோட குடும்ப விஷயங்களை விலாவரியாக சொல்லிகிட்டிருக்காதீங்க. உங்க வேதனையில் சந்தோஷமா குளிர் காயறவங்கதான் அதிகம்ங்கறதைப் புரிஞ்சுக்கோங்க. அதனால நஷ்டமோ, கஷ்டமோ உங்க பிரச்னைகளுக்கு நீங்களே பரிகாரம் தேடிக்கோங்க. ஏற்கெனவே கண்ணில் உபாதை இருக்கறவங்க, மருத்துவர் யோசனையைத் தட்டாதீங்க;

இந்தத் தேதிப் பெண்கள், ரகசியத்தைப் பரம ரகசியமாகக் காத்திட வேணுமுங்க. பிள்ளையாரை வழிபடுங்க; பிள்ளையார் காயத்ரி சொல்லுங்க. பிரச்னைகள் பகலவனைக் கண்ட பனிபோல மறையும்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உத்யோகத்திலே எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்குமுங்க; பொறுமையாகக் காத்திருங்க. அவசரப்பட்டு யாரையும் விமரிசிச்சுடாதீங்க. எந்த விஷயத்லேயும் முடிவெடுக்க முடியாம குழப்பமா இருந்தா வீட்டுப் பெரியவங்ககிட்ட தயங்காம ஆலோசனை கேளுங்க. நீங்களாக எடுக்கக்கூடிய சில தவறான முடிவுகளால வேதனையான பின்விளைவுகள் ஏற்படலாமுங்க. அந்த சமயத்ல உங்களுக்கு ஆதரவா யாருமே இல்லாத நிலைமையும் ஏற்பட்டுவிடலாமுங்க. அதனால அனுபவத்திலே, வயசிலே மூத்தவங்களோட யோசனைகள் உங்களுக்குச் சரியான வழிகாட்டுமுங்க. முதுகு எலும்பில், ஒரே இடத்ல தொடர்ந்து வலி தெரிஞ்சா உடனே உரிய மருத்துவரைப் பார்த்திடுங்க. நண்பர்கள் சொல்லக்கூடிய மருத்துவ டிப்ஸையெல்லாம் ஒதுக்கி வெச்சுடுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் பெரியவங்களோட அனுசரணையாகப் போகிறதுதான் நல்லதுங்க. ராகவேந்திரரை வழிபடுங்க; அவர் நாமாவளி சொல்லுங்க. நன்மைகள் அணிவகுக்கும்.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பாரம்பரிய நோய் அறிகுறி தெரிஞ்சா உடனே மருத்துவர் யோசனையை நாடுங்க. ஏற்கெனவே பாதிக்கப்பட்டவங்க சிகிச்சையை விடாம தொடருங்க. பேச்சில் ரொம்பவும் எச்சரிக்கை தேவைங்க. குறிப்பாக பொதுமக்கள் சேவையில பணியாற்றக்கூடிய அரசாங்க அல்லது தனியார் துறை ஊழியர்கள், எந்த நெருக்கடிக்கும் வளைந்து கொடுத்துப் போகிறதுதான் நல்லதுங்க. சில குதர்க்கவாதிகள் உங்களை அனாவசியமா வம்புக்கு இழுப்பாங்க. பொறுமையுடன் நிலைமையை சமாளிக்கணுமுங்க. உங்களோட எந்த வேதனையும் மேலதிகாரிங்ககிட்ட முரட்டு வாக்குவாதமாக மாறிடாம பார்த்துக்கோங்க. இப்படி உணர்ச்சி வசப்படறதைக் குறைச்சுக்க ஒரு சின்ன வாஸ்து பரிகாரம்: உங்க படுக்கை அமைப்பை மாற்றிப் பாருங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு பொறாமைக்காரர்களால சங்கடம் வரும்; அமைதியா இருந்திடுங்க. சிவனை வழிபடுங்க; சிவ காயத்ரி சொல்லுங்க; சங்கடங்கள் எல்லாம் விலகும்.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தொலைதூரப் பயணம் ஆதாயம் தருமுங்க; அதேசமயம், உங்க உடைமைகளை பத்திரமாகப் பார்த்துக்கோங்க. வியாபாரம், தொழில், உத்யோகம் எல்லாமே சுமுகமாகப் போய்கிட்டிருக்குங்க. பிள்ளைங்கமேல பொறுப்புணர்வோடு அக்கறை எடுத்துக்கோங்க. அவங்களால சிலர், சில பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்குமுங்க. அந்தப் பிரச்னைகளோட விளைவுகளால கோபப்படாம, அவங்களை திசை திருப்ப முயற்சி செய்யுங்க. அவங்களோட ஒரு நல்ல நண்பனாகப் பழகுங்க. தங்களோட அடிமனசு விஷயங்களை எந்தத் தயக்கமுமில்லாம உங்ககிட்ட சொல்றா மாதிரி அவங்களை நடத்துங்க. மற்றபடி எல்லாமே ஏற்றம்தாங்க. உங்க முயற்சிகள்லாம் ஜெயமாவதை உங்க பிள்ளைகளோட மனமாற்றத்திலிருந்தே நீங்க புரிஞ்சுப்பீங்க. வயிறு, மூட்டுகள்ல உபாதைகள் வரலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்களோட வார்த்தைக்கு மதிப்பு கூடுமுங்க. லட்சுமி நரசிம்மரை வழிபடுங்க; அவர் துதி பாடுங்க. லட்சியங்கள் ஈடேறும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

வீட்ல சுபவிசேஷங்கள் தடைகள் நீங்கி மனம் மகிழ நடந்தேறுமுங்க. வருமானம் பெருகுவதால சேமிப்பும் உயருமுங்க. உப தொழில் தொடங்கறது அல்லது வியாபாரத்தை விரிவாக்கறதுன்னு முன்னேற்றம் சந்தோஷப்படுத்துமுங்க. உத்யோகத்லேயும் இருந்து வந்த சிக்கல்லாம் நீங்கி நிம்மதிப் பெருமூச்சு விடுவீங்க. குடும்பத்ல உங்க வாக்குக்கு மதிப்பு கூடுமுங்க. இதுவரைக்கும் உங்களோட அமைதியை, உங்க அறியாமைன்னு நினைச்சுகிட்டிருந்தவங்க மனம் மாறுவாங்க. உங்களோட பேச்சில் தெரியற முதிர்ச்சி, அனுபவமெல்லாம் அவங்களுக்கும் பெரிய உதவியாக இருக்குமுங்க. ஒற்றைத் தலைவலி, சளி உபத்திரவம், பல்வலின்னு உபாதைகள் வரலாமுங்க. ஆனா, சுய மருத்துவம் பார்த்துக்காம சரியான மருத்துவரைப் பாருங்க.

இந்தத் தேதிப் பெண்களோட நீண்டநாள் கனவு பலிக்குமுங்க. நவகிரகங்களை வழிபடுங்க; கோளறு திருப்பதிகம் படிங்க. எந்தக் கோளாறும் அண்டாது.

யதார்த்த  ஜோதிடர் ஷெல்வீ

is there a cure for chlamydia phuckedporn.com home std test

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-04-2019

  22-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-04-2019

  21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்