SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீணையில்லாத வாணி

2013-12-11@ 16:00:48

லலிதாம்பிகை திருவருள் புரியும் ஸ்ரீநகரத்தில் ஒரு பொன்மாலைப் பொழுதில் லலிதாம்பிகையின் முன் லட்சுமி கஞ்சிரா வாசிக்க, சரஸ்வதி தேவி  வீணையை மீட்டி கானமழை பொழிந்து கொண்டிருந்தாள். வீணை இசையில் மனதைப் பறி கொடுத்த லலிதாம்பிகை, ‘‘ஆஹா’’ என்று பாராட்டாகக்  கூற, திடுக்கிட்டாள் சரஸ்வதி. ‘இவ்வளவு இனிமையான குரலை உடைய தேவியின் முன்பா நாம் வீணையை மீட்டினோம்? வீணையின் நாதத்தை விட  தேவியின் குரல்தான் எவ்வளவு இனிமை!’ என்று வியந்தாள். உடனே தன் வீணையை உறையிட்டு மூடிவிட்டாளாம். இந்நிகழ்வை ஆதிசங்கரர் தன்  ஸௌந்தர்யலஹரியின் விபஞ்ச்யா எனும் ஸ்லோகத்தில் விவரித்திருக்கிறார். இந்த லலிதாம்பிகையை ‘யாழைப் பழித்த மொழியாள்’ எனும் பெயரில் இன்றும் நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அருகில் உள்ள வேதாரண்யம் தலத்தில் தரிசிக்கலாம். கூடவே வீணையில்லா சரஸ்வதியையும் வணங்கலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்