SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் ஜூன் 1 முதல் 7வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உத்யோகத்ல சிலருக்கு மேலதிகாரியோடு மனவேற்றுமை  ஏற்படலாம். விவாதத்துக்குரிய விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காம, நாம  சொல்றதை அவர் ஏற்றுக்கணும்னு வீம்பு பிடிச்சீங்கன்னா, விளக்கத்துக்கு பதிலா கோபம்தான் அதிகமா ஏற்படுமுங்க. அதனால, மேலதிகாரியின்  மனநிலையை அனுசரிச்சு, உங்க தரப்பு வாதத்தைப் பக்குவமா எடுத்துச் சொல்லுங்க. இதனால உங்க மதிப்பு உயருமுங்க. அதேபோல குடும்பத்லேயும் நடந்துக்கோங்க. சின்ன வாக்குவாதமும் பெரிய விவகாரமாகப் போயிடலாம், கவனமா இருங்க. சட்டத்துக்கு  புறம்பானவங்களோட நிழல்ல ஒதுங்க நினைக்காதீங்க. சிலருக்கு வயிற்று உபத்திரவம், இடது பக்க ரத்த நாளக் கோளாறுன்னு ஏற்படலாமுங்க. இந்தத்  தேதிப் பெண்கள் அக்கம் பக்கத்தாரிடம் எச்சரிக்கையாகப் பழகுங்க. ஞாயிற்றுக்கிழமை அனுமன் காயத்ரி சொல்லி, வழிபடுங்க; அற்புதங்கள் நிகழும்.  

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


எதிர்பாராத இடத்லேர்ந்து நல்ல செய்திகள் வருமுங்க. அரசாங்கம் சம்பந்தபட்ட பிரச்னைகள் படிப்படியாக நிவர்த்தியாகுமுங்க. உங்களோட தைரிய  முயற்சிகள் வெற்றியும் பாராட்டுகளும் பெறுமுங்க. பெற்றோர் உடல்நலத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. உங்க வேலைகளைக் கொஞ்சம் தள்ளி  வெச்சுட்டு அவங்களை கவனிக்க வேண்டியது உங்க கடமைங்க. அது இறைவனே மகிழும் மனிதாபிமானம்ங்கறதைப் புரிஞ்சுக்கோங்க. முக்கியமா தந்தையாரிடம் அனாவசியமா எந்த வாக்குவாதமும் வெச்சுக்காதீங்க. அவரை அரவணைச்சு, ஆறுதலாகப் பேசுங்க. சிலருக்கு ஒவ்வாமை  காரணமாக சுவாசக் கோளாறு வருமுங்க, தாமதிக்காம மருத்துவரைப் பார்த்திடுங்க. தொலைதூரப் பயணங்களின்போது உடைமைகளை பத்திரமாகப்  பார்த்துக்கோங்க. இந்தத் தேதிப் பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டுங்க. புதன்கிழமை பெருமாள் காயத்ரி சொல்லி வழிபடுங்க;  பெருமைகள் நிலைக்கும்.  

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


குடும்பத்தாரோடு தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீங்க. அது விடுபட்ட குலதெய்வ வழிபாட்டு பயணமாகவும் இருக்கலாம். மனதில்  தன்னம்பிக்கை வளருமுங்க. தைரியமாக முன் வைக்கும் கால்கள், உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துப் போகுமுங்க. கண்கள்ல சிலருக்கு  பிரச்னைகள் ஏற்படலாமுங்க. கால் நரம்பு உபத்திரத்தால சிலர் பாதிக்கப்படலாம் - நரம்பியல் மருத்துவரின் யோசனைகளைக் கேட்டுக்கோங்க. புதிய  வீடு அல்லது வசதிகள் கூடிய வேறு வாடகை வீட்டுக்குக் குடி போவீங்க. தடைகள் நீங்கி சுபவிசேஷங்கள் மனம் மகிழ நடைபெறுமுங்க. முக்கியமா கல்யாண பிராப்தத்துக்கு உத்தரவாதம் தரமுடியுமுங்க. உத்யோகத்ல  திடீர்னு மேன்மை உண்டாகும். இடமாற்ற வாய்ப்பு கிடைச்சா உடனே ஏற்றுக்கோங்க; அது எதிர்காலத்துக்கு நல்லது. இந்தத் தேதிப் பெண்களுக்கு  பூர்வீக சொத்தில் உரிய பங்கு கிடைக்கக் கூடும். ஞாயிற்றுக்கிழமை சூரிய காயத்ரி சொல்லி வழிபடுங்க: வாழ்வில் புத்தொளி பரவும்.  

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உத்யோக நிமித்தமாகவோ அல்லது வேறு வகையிலோ உண்டாகக் கூடிய தொடர் பயணங்கள் ஆதாயம் தருமுங்க. எதிரிகள் அடங்கிப் போவாங்க.  அதேசமயம், எந்த சந்தர்ப்பத்திலேயும் ஆக்ரோஷம் கொள்ளாம இருக்கணுமுங்க. அதனால நன்மைகள் உண்டுங்க. இதுவரை நிலவிவந்த மனக் குழப்பம்  தீருமுங்க. குழப்பத்துக்கான காரணத்தை யோசிச்சு அதிலே உங்க பங்கு இருக்குன்னா உடனே திருத்திக்கப் பாருங்க. குடும்பத்ல பெற்றோர்,  உடன்பிறந்தோர் உடல்நலத்ல அக்கறை எடுத்துக்கோங்க. ஏற்கெனவே வயிற்று உபத்திரவம் இருக்கறவங்க உணவுப் பழக்கத்ல அதிக எச்சரிக்கை எடுத்துக்கணுமுங்க. உறவுக்காரங்க, நண்பர்கள்னு யாரோட  முகத்துக்காகவும் பார்க்காதீங்க; விருந்துகள்ல அளவோட கை வையுங்க. இந்தத் தேதிப் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னை, ஹார்மோன்  குறைபாடுன்னு பாதிப்பு வரலாமுங்க. வெள்ளிக்கிழமை மகாலட்சுமி காயத்ரி சொல்லி வழிபடுங்க; மகோன்னத வாழ்வு கிட்டும்.  

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


உத்யோகஸ்தர்களுக்கு புது மதிப்பு உண்டாகுமுங்க. பதவி, ஊதிய உயர்வுகள், கூடுதல் வருமானம், சலுகைகள் கொண்ட வேறு வேலைன்னு கைவரப்  பெறுவீங்க. இந்தத் தேதிப் படைப்பாளிகளுக்குப் புதிய, உயர்ந்த அங்கீகாரம் கிடைக்குமுங்க. அவங்களோட படைப்புகளுக்கு மாநில அளவிலே  மட்டுமல்லாம இந்திய, வெளிநாட்டு விருதுகள் கிடைக்கவும் வாய்ப்பு இருக்குங்க. காது, மூக்கு, தொண்டை பகுதிகள்ல பாதிப்பு வரலாமுங்க. இந்தத்  தேதி இளைஞர்களோட கனவுகள் நிறைவேறுமுங்க. இவங்க சோம்பலைக் கிட்டயே சேர்க்காம இருந்தா ஆவலோடு எதிர்பார்த்த அயல்நாட்டு  மேல் படிப்பும் சாத்தியமாகும். பொதுவாகவே காலத்தை வீணாக்காம முறையாகப் பயன்படுத்திக் கொள்றது எதிர்கால நன்மைகளுக்கு  வழிவகுக்குமுங்க. இந்தத் தேதிப் பெண்களோட எண்ணங்கள் எளிதாக ஈடேறுமுங்க. வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி காயத்ரி சொல்லி வழிபடுங்க;  தடைகள் தகர்ந்து போகும்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


தொழில், வியாபாரம், உத்யோக வகைகள்ல உயர்வுகள் மகிழ்ச்சி தருமுங்க. அது படிப்படியான முன்னேற்றம்தான்னாலும் அது உங்களோட உழைப்பின்  பலன்னு உணரும்போது சந்தோஷத்துக்கு அளவுதான் ஏது! அந்த உற்சாகத்ல ஆக்கபூர்வமான புது முயற்சிகள்லாம் வெற்றி பெறுவதைப் பார்த்தும்  மகிழ்வீங்க. புது மதிப்பும் வந்து சேருமுங்க. புதிய அறிமுகங்களால, குறிப்பா வேற்று மதத்தவரால ஆதாயம் கிட்டுமுங்க. குடும்பக் கஷ்டங்கள்லாம் படிப்படியாகக் குறையறதும் மனசுக்குப் பெரிய ஆறுதல் தருமுங்க. புதிதாக வாகனம், வீடு, மனைன்னு சொத்து சேர்க்கையும்  ஏற்படுமுங்க. உணவுக் குழாய்ல ஏற்கெனவே கோளாறு இருக்கறவங்க, மருத்துவத்தைக் கைவிடாம தொடரணுமுங்க. இந்தத் தேதிப் பெண்களோட  மனசங்கடம் நிவர்த்தியாகும். அவங்க யோசனைகளுக்கு மதிப்பு கூடுமுங்க. செவ்வாய்கிழமை துர்க்கை காயத்ரி சொல்லி வழிபடுங்க; துடிப்போடு  வாழ்வீங்க.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


உத்யோகத்ல, குறிப்பாக அரசுத்துறை ஊழியர்களுக்கு இருந்துவந்த சுணக்கம் மாறிடுமுங்க. புது பொறுப்புகள் வந்து சேருமுங்க. வழக்கமான  உற்சாகத்தோட அதில் ஈடுபட்டு, உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவங்களுக்கும் நன்மையை ஏற்படுத்திக்கோங்க. மறைமுக எதிரிகளோட சதிகளை  எளிதாக முறியடிச்சுடுவீங்க. உங்க சாதனைகளால பிறருக்கு உங்க மேல நம்பிக்கை வளருமுங்க. குடும்பத்ல சுபவிசேஷங்கள் நடைபெறுமுங்க. இதுக்காகப் புது கடன் ஏற்பட்டாலும் பாதகமில்லீங்க. குடும்பத்ல மதிப்பு, மரியாதை கூடுமுங்க. பிள்ளைகள் சம்பந்தப்பட்ட சுபவிஷயங்கள்ல இருந்த  தடைகள் நீங்கிடுமுங்க. உறவுக்காரங்க உங்ககிட்ட யோசனை கேட்டுப்பாங்க. ஏற்கெனவே உடல்நலமில்லாம மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டிருந்தவங்க சுகமாகி வீடு திரும்புவீங்க. இந்தத் தேதிப் பெண்களுக்கு நிம்மதி, சந்தோஷம் கூடுமுங்க. வெள்ளிக்கிழமை கணபதி காயத்ரி  சொல்லி வழிபடுங்க; கனவுகள் நனவாகும்.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


குலதெய்வ வழிபாடு ஏதேனும் பாக்கி இருந்தா அதை உடனே முடிச்சுடுங்க. இதனால் தடைபட்டுகிட்டிருக்கும் வேலைகள் எல்லாம் துரிதமாக  முடியுமுங்க. வாழ்க்கைத் துணையின் உடல்நலத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. உங்களோட பல இறக்கங்களின்போது நல்ல யோசனைகளைச்  சொல்லி, ஆதரவா இருந்தவங்க அவங்க; அதனால அவங்க நலத்தை கவனிங்க. குடும்பத்ல சுயநலத்தைக் கொஞ்சம் தள்ளி வெச்சுட்டு  குடும்பத்தாரோட நலன்ல அக்கறை காட்ட வேண்டியது ரொம்பவும் அவசியமுங்க. அனாவசிய வாக்குவாதம், தேவையில்லாத கோபத்தைத்  தவிர்த்துடுங்க. ரத்தக் கொதிப்பு, சர்க்கரைன்னு பரம்பரை நோய் இருக்கறவங்க காலம் தவறாம மருத்துவம் எடுத்துக்கோங்க. பணிபுரியும் இந்தத் தேதிப்  பெண்களுக்கு வருமான, பதவி உயர்வுகள் கிடைக்குமுங்க. வியாழக்கிழமை மகான் ராகவேந்திரர் மூல மந்திரம் சொல்லி வழிபடுங்க. மகிமைகள்  உண்டாகும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


பூர்வீக சொத்தில் நியாயமான உங்க பங்கு கைக்கு வருமுங்க; அதுசம்பந்தமா இருந்த வழக்கும் முடிவுக்கு வருமுங்க. உத்யோகம், வியாபாரம்,  தொழில்ல இருந்த பிரச்னைகள் நிவர்த்தியாகிடுமுங்க. படைப்பாளிகளுக்கு புதிய அந்தஸ்து கிடைக்குமுங்க; பலராலும் ஒதுக்கப்பட்டவங்க, இப்ப  கவனிக்கப்படுவீங்க; புது வாய்ப்புகள் பெறுவீங்க. பிள்ளைகளோட உடல்நலத்தை கவனிக்கறதோடு அவங்களோட பழக்க வழக்கங்களையும் கவனிங்க.  அவங்க சகவாசம் சில பிரச்னைகளைக் கொண்டு வரலாம். அவங்ககிட்ட பக்குவமாகப் பேசி, நேர்வழிக்குத் திருப்ப முயற்சி செய்யுங்க. சிலருக்கு  அடிவயிறு மற்றும் கழிவுப் பாதையில் உபத்திரவம் வரலாமுங்க. மருத்துவர் யோசனையைத் தட்டாம கடைபிடிங்க. இந்தத் தேதிப் பெண்கள் உறவினர்  பேச்சை நம்பி யாரையும் சந்தேகப்படுவதோ, வாக்குவாதத்தில் ஈடுபடுவதோ செய்யாதீங்க. சனிக்கிழமை சிவ காயத்ரி சொல்லி வழிபடுங்க; சிறப்புகள்  சேரும்.

யதார்த்த  ஜோதிடர்ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • UkraineCoronaProtest

  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் இருந்து மக்களை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு: உக்ரைனில் வெடித்தது போராடடம்!

 • puthu2020

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தங்குவதற்காக டெல்லி மௌரியா ஹோட்டலில் ஆடம்பரமாகத் தயார் செய்யப்பட்டுள்ள பிரெசிடென்ட் சூட்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்