SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருங்கல்லால் உருவான கலைக்கோயில்

2013-12-11@ 16:00:48

காக்கையநல்லூர்

தமிழகத்தில் வாலி பூஜித்ததாகக் கூறப்படும் ஒரு சில சிவத்தலங்களில் முக்கியமானது, குரங்கணில் முட்டம், காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ளது. இதே போன்று, வாலி வழிபட்ட இன்னொரு முக்கிய தலமாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்திற்கு அருகிலுள்ள திருவாலீஸ்வரம் விளங்குகிறது. தற் போது காக்கையநல்லூர் என்று அழைக்கப்படுகிறது. பழமையும் வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த இந்தச் சிறிய கிராமத்தில் சிவபெருமான் திருவாலீஸ்வரர்  என்று அழைக்கப்படுகிறார். காக்கையநல்லூர் என்று இந்த ஊருக்கு பெயர் அமைந்ததன் காரணம், இங்கு எமன் காகத்தின் வடிவில் சிவபெருமானை  பூஜித்து வழிபட்டதுதான் என்கிறார்கள்.

அழகிய சிறிய கிராமத்தில், கடனா நதிக் கரையில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. இப்பகுதிக்கு வந்த அகத்திய மாமுனிவரின் கமண்டலத்திலி ருந்து (கடம்) தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் இந்த  நதி கடனா நதி என்று அழைக்கப் பெற்றது.  ஆலயத்தின் தெற்குப் பகுதியில் வாலீஸ்வரரும் அவருக்கு வலப் பக்கத்தில் அன்னை சௌந்தரநாயகியும் தனித்தனி சந்நதிகளில் அருள்கிறார்கள்.  ராமாயண கதாபாத்திரமான வாலி இங்கு சிவபெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக உள்ள ஐதீகத்தின்படி, இத்தலத்து சிவபெருமான் திருவாலீ சர், வாலிநாதர் எனப்படுகிறார். இறைவனின் கருவறையை அடுத்து 8 தூண்களுடன் கூடிய அர்த்த மண்டபம், மகாமண்டபம், திருச்சுற்று மாளிகை  எனப்படும் பிராகாரம் போன்றவை விஸ்தாரமாக அமைந்துள்ளன. கன்னி மூலை விநாயகர், மயிலுடன் நின்ற கோலத்தில் கார்த்திகேயன், ஜுரதேவர்,  அதிகார நந்தி, பைரவர் ஆகியோர் மூலவரைச் சுற்றிலும் பிராகாரங்களிலும் அமர்ந்துள்ளனர்.

பாண்டிய நாட்டில், முழுவதும் கருங்கல்லினால் அமைக்கப்பட்ட கருவறை விமானத்தைக் கொண்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று. இந்தக் கலைப்  பொக்கிஷமான ஆலயம் முதலாம் ராஜராஜனுக்கு முன்பாக கருங்கல்லில் அமைந்த கலைக்கோயிலாகும். பொதுவாக மேலே உள்ள விமானம் சுதை யினால் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், ,இங்கோ கருவறை மற்றும் அதன் மேலுள்ள விமானம் முழுவதுமே கற்றளிதான். கருவறை மற்றும் விமா னச் சிற்பங்கள் பார்த்து பரவசப்படக் கூடியவை. இந்தக் கல் விமானத்தில் சிவபெருமானின் 64 திருவுருவங்கள் மிக நுணுக்கமாக வடிக்கப்பட்டுள்ளன.  இவற்றில் கங்காதரர், நந்தியுடன் கூடிய விருஷபாந்தகர், பார்வதி, உமா ஆலிங்கன மூர்த்தி, தட்சிணாமூர்த்தி, ஆனந்த தாண்டவ நடராஜர், அர்த்தநா ரீஸ்வரர், திரிபுராந்தகர், காலாந்தகர், லிங்கோத்பவர், காமதகனமூர்த்தி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இவை தவிர, கங்காளர், கஜசம்ஹாரமூர்த்தி,  சண்டேசர், ஐராவதத்தில் இந்திரன், யோக நரசிம்மர், பிரம்மா என்று சொல்லிக்கொண்டே போகலாம்.முதலாம் ராஜராஜன் உள்ளிட்ட பல பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகளையும் இங்கே காணலாம். ராஜராஜனின் கல்வெட்டிலிருந்து இவ்வூர் முன்னி நாட்டைச் சேர்ந்த ராஜ ராஜ சதுர்வேதி மங்கலமாக இருந்தது தெரிய வருகிறது. அம்பாசமுத்திரத்தை அடுத்துள்ள ஊர்க்காட்டிலுள்ள சிவாலயத் தூண் ஒன்றில் வாலி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யும் புடைப்புச் சிற்பம் ஒன்று உள்ளது. கல்வெட்டுகளில் சிவபெருமான் திருவாலீசுரமுடைய மகாதே வர் என்று குறிப்பிடப்படுகிறார்.  இந்தக் கலைப் பொக்கிஷமான ஆலயம் மத்திய தொல்துறையினரின் பராமரிப்பில் உள்ளது. ஆலயத்தைச் சுற்றிலும் பூச்செடிகளைப் பராமரிப்பதுடன்,  ஆலயம் நன்கு புனரமைக்கப்பட்டு வெளி மதில்கள் பழமை மாறாமல் கலைவல்லுநர்களால் செப்பனிடப்பட்டு வருகின்றன.

- விஜயலட்சுமி சுப்பிரமணியம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-08-2019

  23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mamtateashop

  மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

 • chidambaramprotest

  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

 • delhiprotest22

  காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

 • sandisreal

  இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்