SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தரிசனம் ஆரம்பமாகும் இடம் !

2020-05-13@ 09:54:52

தரிசனம் என்றால் என்ன? அது ஒரு காட்சி. ஆனால் நம் கிறிஸ்தவ  வாழ்க்கையிலோ காட்சி என்றால் ஒரு சாதாரண நம் கண்கள் பார்க்கும் காட்சி அல்ல. அதுவே தூய ஆவியானவர் காட்சியின் மூலமாக வெளிப்படுத்தும் ஒரு சாட்சி ஆகும்.நம் ஆழ்மனதிலிருந்தே தரிசனமானது ஆரம்பப்படுகிறது. அதன் ஆரம்ப நேரம் நமது ஆவியால் தூய ஆவியானவர் நம்முள் குடிகொள்ள ஆரம்பிக்கும் அந்த நிமிடம் தான். இது பல நிலைகளில் தொடர்ந்து நம்மை உருவாக்கி, நம்மையும் தூய ஆவியையும் ஒரே அலைவரிசையில் செயல்படுமாறு நம்மை ஒன்றிணைக்கிறது. நாம் பாவத்தை முற்றும் துறந்து ஆண்டவருடைய பிள்ளைகளாய் மாறி அவரை மட்டுமே நாம் பின் தொடரும் போது ஆண்டவரது தரிசனத்தை நம்மால் உணர முடியும். தூய ஆவியானவரின் செயல்பாட்டின் மூலமாகவே நாம் உணர ஆண்டவர் நமக்கு உதவி செய்வார்.

மூத்த தீர்க்க தரிசிகளாகிய ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் போன்றவர்கள் ஆவர். இயேசு கிறிஸ்துவின் தாயாகிய அன்னை மரியாளும் வானதூதர் மூலமாக தான் நேரடியாக தரிசனத்தை பெற்றார். பெற்ற தரிசனம் ‘சரி’ என்று உறுதிப்படுத்தினார். மண்ணுலக மீட்பில் தனக்கும் ஒரு மிகப் பெரிய பங்களிப்பு இருப்பதை அறிந்து மனமகிழ்ச்சி கொண்டார். அன்னை மரியாளின் ஆவியும், ஆத்துமாவும் ஒருகிணைந்த நிலையில் பேறுவகைக்கொண்டது. இவ்வாறே மோசே வனாந்தரத்திலே ஆடுகளை மேய்க்கையில் மலையின் உச்சியில் ஒரு முட்செடி பற்றி எரிவதைக் கண்டு அதனருகே சென்றார். அப்போது எரிந்துக கொண்டிருக்கும். தீப்பிழம்பிலிருந்து தேவதூதன் எழுந்த தரிசனத்தைக் கண்டு  கொண்டார். அப்போது தான் மோசே தேவனால் அழைக்கப்பட்டார். பின் மோசேயின் வாயிலாக தேவன் நமக்கு பத்து கட்டளைகளை அளித்தார்.

இதைப்போன்று தரிசனத்தை பெற்றவர்களை தமது நொருங்குண்ட மனதுடன் அதனைக் காத்துக் கொண்டனர். பெற்ற ஊழியத்தை நிறைவேற்ற கவனமாக இருந்தனர். இவர்களைப் போல் ஊழியத்திற்கான தரிசனம் பெற்றவர்களில் பலர் வென்றனர் மற்றும் சிலர் வீழ்ந்தனர். இந்த பாதையின் எழுச்சிக்கு சாட்சியாய் அவர்கள் ஆண்டவரால் வழிநடத்தப்பட்டு ஊர் ஊராக நாடு நாடாக சென்று நற்செ–்தியை பரப்பி திருவிவிலியத்திலே இடம் பிடித்துள்ளனர். இவர்கள் மட்டும் அல்ல நாமும் ஆண்டவரின் தரிசனத்தை பெற முடியும். எவ்வாறெனில் நமது உடல் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலைப் போல பரிசுத்தமாய் காக்கும் போதும், நமது மனதை இயேசுவின் மனதை போல குற்றமற்ற தாயும், கள்ளமற்றதாயும், தூய்மையாக மாறும் போது, தூய ஆவியாரின் வல்லமையால் நாம் ஆண்டவரது தரிசனத்தையும், பிரசன்னத்தையும் உணர முடியும் என்ற நம்பிக்கையில் நம் வாழ்வை புதுபடைப்பாக்குவோம்.

-ஜெரால்டின் ஜெனிபர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்