SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பங்குனி உத்திர விரதத்தை அனுஷ்டிக்கும் முறைகளும் பலன்களும்

2020-04-06@ 11:09:40

தமிழில் உள்ள மாதங்களில் 12 வது மாதமாக வருகிறது பங்குனி. அதே போல 27 நட்சத்திரங்களில் 12 வது நட்சத்திரமாக இருக்கிறது உத்திரம். இவை இரண்டு சேர்ந்து வரும் ஒரு புனிதமான நாளையே நாம் பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். இந்த நன்னாளில் பன்னிரு கரங்கள் கொண்ட முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டால் நமது வாழ்வில் குறையா செல்வம் சேரும், திருமண தடை அகன்று திருமணம் கை கூடும். அதோடு பங்குனி உத்திர விரதத்தால் ஒருவர் தெய்வ நிலையை அடியை இயலும்.

பங்குனி உத்திரம் விரத முறை: அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்க வேண்டும். இன்று முழுவதும் கந்த சஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ் போன்ற நூல்களை படிக்கலாம். வேலை உள்ளவர்கள் “ஓம் சரவண பவ” என்னும் மந்திரத்தை நாள் முழுக்க உச்சரிக்கலாம். இதன் மூலம் நமது மனமானது இறைவனையே நினைத்த வண்ணம் இருக்கும். அதனால் மனம் செம்மை அடையும். இன்று ஒரு வேலை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும். வயதானவர்கள், உடல் நலம் பாதிக்க பட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை உண்ணலாம். நாள் முழுக்க விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று அர்ச்சனை செய்து விரதத்தை நிறைவு செய்யலாம். அருகில் முருகன் கோவில் இல்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் கோயிலிற்கு செல்லலாம்.

பங்குனி உத்திர திருமண விரதம்: திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இன்று விரதம் இருந்து இறைவனை வழிபாட்டால் நிச்சயம் விரைவில் திருமணம் கை கூடும். பங்குனி உத்திர விரதம் இருந்தால் சிறப்பான நல்லதொரும் வரன் கை கூடி வரும் என்பது முன்னூர்கள் வாக்கு. அதனாலேயே பங்குனி உத்திரம் விரதத்திற்கு திருமண விரதம் என்றொரு பெயரும் உண்டும். இன்று ரங்கநாத பெருமாள் கோவிலில் நடக்கும் வைபவத்தை காண்பது விஷேஷம். இதனை கண்டால் களத்திர தோஷம் விலகி திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

பங்குனி உத்திர நாளில் தான் முருக பெருமான் வள்ளியை மணந்துள்ளார். அது மட்டுமா சிவன் பார்வதி, ராமன் சீதை, தேவேந்திரன் இந்திராணி போன்றோர்களின் திருமண நாளாகவும் பங்குனி உத்திர நன்னாள் விளங்குகிறது. சபரிமலையில் தர்ம சாஸ்தாவாக வீற்றிருக்கும் ஐயன் ஐயப்பன் இந்த பூமியில் அவதரித்ததும் இந்த நன்னாளில் தான். கலைமகள் பர்மாவின் நாவில் அமர்ந்ததும் இந்த நாளில் தான். மகாலட்சுமி பூமியில் அவதரித்ததும் இந்த நாளில் தான். இப்படி பங்குனி உதிரத்தை நாளின் சிறப்பை கூறிக்கொண்டே போகலாம்.

கணவன் மனைவி விரதம்: திருமணமான தம்பதியினர் இருவருக்குள்ளும் ஏதாவது ஒரு பிரச்சனை அடிக்கடி நேர்ந்தால் இன்று விரதம் இருப்பதன் மூலம் அந்த பிரச்சனைகள் விலகும். கணவன் மனைவி இருவரும் நீண்ட ஆயுளோடு அன்பில் திளைத்திருக்க பங்குனி உத்திர விரதம் உதவும். அதோடு வீட்டில் உள்ள பண கஷ்டங்கள் யாவும் விலகி செல்வ செழிப்போடு வாழ இந்த விரதம் உதவும். சுமங்கலி பெண்களில் பலர் இன்று கோயிலிற்கு சென்று புதுத்தாலியைப் பெருக்கிக் கட்டிக்கொள்வது வழக்கம்.

தெய்வ நிலையை அடைய உதவும் விரதம்: எவர் ஒருவர் தொடர்ந்து 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருக்கிறாரோ அவருக்கு மறுபிறவியானது தெய்வப்பிறவியாக அமையும். அதோடு அவர் பிறப்பு இறப்பு என்ற கால சக்ரத்தில் இருந்து விடுபட்டு மோட்ச நிலையை அடைவர் என்று ஞான நூல்கள் குறிப்பிடுகின்றன. இப்படி பல சிறப்புகள் பெற்ற பங்குனி உத்திர விரத்தை நாமும் கடைபிடிப்போம். இறைவனின் அருளில் என்றும் திளைத்திருப்போம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்