SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீங்கள் நினைத்தது நடக்க இந்த ஒரு பரிகார வழிபாடு செய்யுங்கள் போதும்

2020-03-19@ 09:15:23

உலகில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவே எறும்பு வடிவம் முதல் யானை வடிவம் வரை கொண்ட பல வகையான விலங்குகள் தோன்றியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அவற்றுக்கும் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பாக செடிகள், மரங்கள் போன்றவை தோன்றியிருக்கின்றன. இப்பூமியில் தாவரங்கள் தான் இன்ன பிற ஜீவராசிகள் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கின்றன. அதிலும் நம் நாட்டிலும் பல அற்புதமான மருத்துவ மற்றும் தெய்வீக சக்திகள் கொண்ட மரங்கள் தாவரங்கள் போன்றவை வளர்கின்றன. அத்தகைய சிறப்பு வாய்ந்த பல வகையான மரங்களில் ஒன்று தான் வன்னி மரம். இந்த வன்னி மரத்திற்கு இந்து மதத்தில் ஒரு தெய்வீக தானம் அளிக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.

அந்த வன்னி மரம் கொண்டு செய்யும் ஒரு பரிகார முறை என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். பல அற்புதமான தெய்வீக மூலிகைகள் மற்றும் மரங்கள் நிறைந்த ஆன்மிக பூமியாக இருக்கிறது பாரத நாடு. இந்த நாட்டில் வளருகின்ற மூலிகைகள் மற்றும் மரங்களைப் பற்றி சித்தர்கள் தங்களின் வைத்திய நூல்களிலும், மாந்திரீக குறிப்புகளிலும் எழுதி வைத்துள்ளனர். அத்தகைய அற்புதமான தெய்வீக ஆற்றல் வாய்ந்த ஒரு மரம் வன்னி மரம். இந்த வன்னி மரம் என்பது சிவபெருமானின் விருப்பத்திற்குரிய மரங்களில் ஒன்றாக இருக்கிறது. பல சிவன் கோயில்களில் வன்னி மரம் தல விருட்சமாக இருப்பதை நாம் காணமுடியும். சிவன் மற்றும் சக்தியாகிய பார்வதி தேவியின் ஆற்றலை ஒருங்கே பெற்ற மரமாக இந்த வன்னி மரம் இருக்கிறது என்பது பெரியோர்களின் வாக்கு.

மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது பாண்டவர்கள் தங்கள் ஆயுதங்கள் அனைத்தையும் ஒரு வன்னி மரத்தின்பொந்திற்குள்ளாக வைத்து விட்டு சென்றனர். பிறகு கௌரவர்களுடன் போர்புரியும் போது அந்த வன்னி மரத்தை வணங்கி அதிலிருந்து தங்களின் ஆயுதங்களை எடுத்துச் சென்று அவர்களுடன் போரிட்டு மகாபாரத யுத்தத்தில் வெற்றி பெற்றனர். இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் பஞ்சபாண்டவர்களில் சிறந்த வில்லாளி என பெயர் பெற்ற அர்ஜுனன். அர்ஜுனனுக்கு மற்றொரு பெயர் விஜயன் என்பதாகும். அந்த விஜயன் புரட்டாசி மாதத்தில் வருகின்ற தசமி திதியில் வன்னி மரத்தை வழிபட்டு போரில் வெற்றி பெற்றதால் இந்த நாளை விஜயதசமி என அழைக்கின்றனர்.

ஒரு நபரின் வாழ்வில் திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, கல்வித்தடை, வேலைவாய்ப்பின்மை தொழில் வியாபாரத்தில் நஷ்டம், உடல் மற்றும் மனநல குறைபாடுகள் போன்றவை தீர வன்னி மர வழிபாடு செய்து வர வேண்டும். அதிலும் குறிப்பாக மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை அல்லது தேய்பிறையில் தசமி திதிகளில் வன்னி மரத்தை வணங்குவதால் சிவபெருமானின் அருள் கிடைத்து உங்களின் அனைத்து கஷ்டங்களும் நீங்கி, நீங்கள் விரும்பிய அனைத்தும் நிறைவேறும். வன்னி மர வழிபாட்டை மாதந்தோறும் வருகின்ற தசமி திதிகளில் செய்வது சிறந்தது தான் என்றாலும் விஜயதசமி தினத்தன்று வன்னி மரத்துக்கு அடியில் பச்சரிசி மாவு சமர்ப்பித்து, நல்லெண்ணெய் தீபமேற்றி வன்னி அத்தி மரத்தை 3 முறை சுற்றி வந்து வழிபாடு செய்வதால் அதன் பிறகு உங்கள் வாழ்வில் அனைத்திலும் மகத்தான வெற்றிகளை மட்டுமே உண்டாகும் என்பது அவர்களின் கருத்தாகும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்