SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரடையான் நோன்பு

2020-03-14@ 11:57:35

கணவன்  நீண்ட ஆயுளுடன்  மகிழ்ச்சியாக இருக்க பெண்கள் கடைபிடிக்கும் நோன்பு காரடையான் நோன்பு. இதை கெளரி நோன்பு, காமாட்சி நோன்பு, சாவித்ரி நோன்பு என்றும் அழைக்கிறார்கள். மாசியும், பங்குனியும் கூடும் வேளையில் கடைபிடிக்க வேண்டும். இந்த நோன்பில் நைவேத்தியமாக கார அரிசி மாவும், காராமணி அல்லது துவரம் பருப்பு கலந்த அடையும்  செய்யப்படுகிறது. முற்காலத்தில் வெல்லம் சேர்த்த அடை தான் நைவேத்தியம் செய்தார்கள். தற்போது உப்பு சேர்த்த கார அடையும், உடன் வெண்ணெயும் சேர்த்து படையலில் வைக்கப்படுகிறது. முன்னதாக அடை வேக
வைக்கப்படும் கடாயின் அடியில் வைக்கோல் பரப்பி அதன் மீது நீர் ஊற்றி அடையை வேகவிடுவார்கள்.

நெற்பயிர்கள் கதிரிலிருந்து பிரியும் வரை வைக்கோல் காப்பதுபோல் பூமியிலிருந்து என் உயிர் பிரியும் வரை  நீ உடன் வரவேண்டும் என்று மனைவி கணவனிடம்  எதிர்பார்ப்பதை உணர்த்துவதாக இருப்பது போன்றும், சாவித்ரி எமனிடம் செல்லும் போது கணவனது உடலை பாதுகாக்க  வைக்கோலைப் போர்த்தி சென்றதாகவும் இதற்கு காரணமாக சொல்வார்கள். இந்தப் பூஜையை கடைபிடிக்கும் பெண்கள் பூஜை முடியும் வரை உண்ணாமல் இருக்க வேண்டும்.

இயலாதவர்கள் பழம் சாப்பிடலாம். அதிகாலை நீராடி வீட்டை தூய்மையாக அலங்கரித்து பூஜை அறையை சுத்தம் செய்யவும். வாசல்களை மாவிலைத் தோரணங்களால் அலங்கரிக்கவும். பூஜை அறையில்  காமாட்சி அம்மனையும்,  சுவாமி படங்களுக்கும் பூ மாலையும்  அணிவிக்க வேண்டும்.
கலசம் வைக்கும் பழக்கம் இருப்பவர்கள் ஒரு கலசத்தின் மேல் மாவிலை செருகி, தேங்காய் வைக்க வேண்டும். அதில் குங்குமம் மஞ்சள் பூசி அதன் மேல் மஞ்சள் கயிறை கட்டி வைக்கவும். கலசத்துக்கு அருகிலேயே காமாட்சி அம்மன் படம் வைத்து சாவித்ரியாக நினைத்து பூஜிக்கவும்.

பூஜை அறையில் விளக்கேற்றி சுவாமிக்கு படையல் இடும் இடங்களில் மாக்கோலம் போடவேண்டும். அதன் மீது நுனி இலை போட்டு  வைக்க வேண்டும். நுனி வாழை இலையில் மங்கலகரமான பொருட்களான மஞ்சள், வெற்றிலைப்  பாக்கு, வாழைப்பழம்  தேங்காய், மஞ்சள் சரடு
(மஞ்சள், பூ இதழ் தொடுத்து)  வைத்து நடுவில் கார அரிசி மாவும், அடையை வைத்து நடுவில் வெண்ணெயையும் வைத்து வழிபடவேண்டும்.

தொகுப்பு: ஆர்.அபிநயா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்