SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2020-03-13@ 14:26:30

மார்ச் 14, சனி:  தேய்பிறை சஷ்டி, ஷடசீதி புண்ணிய காலம். காரடையான் நோன்பு.  ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருமஞ்சன சேவை. காஞ்சி ஸ்ரீகச்சபேஸ்வரர் தாயார்குளம் தெப்பல் உற்சவம். வாலாஜாபேட்டை அனந்தலை தன்வந்த்ரி ஆரோக்யபீடத்தில் இன்று  கடன் பிரச்னை விலக  ருணஹர கணபதி ஹோமம்.

மார்ச் 15, ஞாயிறு:  மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி புன்னை மர கண்ணன் அலங்காரத்தில் பவனி.

மார்ச் 16, திங்கள்:  தேய்பிறை அஷ்டமி. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் காலை திருப்பல்லக்கு. திருவெள்ளறை ஸ்ரீசுவேதாத்திரிநாதர் காலை சிம்ம வாகனத்திலும், இரவு சேஷ வாகனத்திலும் பவனி.

மார்ச் 17, செவ்வாய்: நவமி.  சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். பதஞ்சலி சித்தர் குருபூஜை.
மார்ச் 18, புதன்: திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர். காந்தியம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி பஞ்சமுக ஹனுமார் வாகனத்தில்  ராமர் திருக்கோலமாய்க் காட்சியருளல். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் சூர்ணாபிஷேகம்.

மார்ச்  19, வியாழன்:  உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கு. வெண்ணெய்த்தாழி சேவை. திருவெள்ளறை ஸ்ரீசுவேதாத்திரிநாதர் வண்டலூர் சப்பரத்திலும், இரவு தங்கக் குதிரை வானத்திலும் திருவீதியுலா.  திருக்குறுங்குடி ஸ்ரீநம்பிக்கோயிலில் தேரோட்டம்.

மார்ச் 20, வெள்ளி: ஏகாதசி. திருவோண விரதம். திருவெள்ளறை ஸ்ரீசுவேதாத்திரிநாதர் கோயிலில் தேரோட்டம். கும்பகோணம் ஸ்ரீசக்கரபாணி ஸ்வாமி திருக்கல்யாணம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்