SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திட்டாதே..!

2020-03-10@ 13:18:07

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரைகள் பல “கட்டளைகள்” எனும் அடிப்படையில் நபிமொழித் தொகுப்பு  நூல்களில் பதிவாகியுள்ளன. அவ்வாறு  அமைந்த சில கட்டளைகள் வருமாறு: இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள்:

“சொற்களில் சிறந்தது இறைவனின் சொல்லாகும். செயல்களில் சிறந்தது முஹம்மதாகிய என்னுடைய செயலாகும்.

“எச்சரிக்கை! மார்க்கத்தின் பெயரால் புதிது புதிதாக உருவாக்கப்படும் நவீனங்கள் குறித்து நான் உங்களை எச்சரிக்கிறேன். செயல்களில் மிகவும் தீயது மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்படும் நவீனம்தான். அத்தகைய நவீனம் ஒவ்வொன்றும் அநாச்சாரம்(பித்அத்) ஆகும். ஒவ்வொரு அநாச்சாரமும் வழிகேடுதான்.

“எச்சரிக்கை. ஆயுள் மீதான உங்களின் எதிர்பார்ப்பு நீண்டு, உங்களின் உள்ளங்கள் இறுகிக் கல்லாகிவிட வேண்டாம்.

“அறிந்துகொள்ளுங்கள். எது இனி வரப்போகிறதோ அதுவே அருகில் உள்ளதாகும். எது இனி வராதோ அதுவே தொலைவில் உள்ளதாகும்.

“அறிந்துகொள்ளுங்கள். நற்பேறு அற்றவன் என்பவன் தன் தாயின் வயிற்றில் இருந்தபோது நற்பேறு அற்றவன் என்று எழுதப்பட்டுவிட்டவனே ஆவான். நற்பேறு பெற்றவர் என்பவர் பிறரின் வாழ்விலிருந்து படிப்பினை வழங்கப்பெற்றவரே ஆவார்.

“எச்சரிக்கை. இறைநம்பிக்கை கொண்டவரைக் கொலை செய்வது இறைமறுப்பு போன்ற செயலாகும். இறை நம்பிக்கையாளரைத்
திட்டுவது பாவமாகும்.

“முஸ்லிம் ஒருவர் தம் சகோதரரிடம் கோபம் கொண்டு மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.

“எச்சரிக்கை. பொய் பேச வேண்டாம் என்று நான் உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், பொய் வினையாகப் பேசுவதற்கும் தகுதியற்றது. விளையாட்டாகப் பேசுவதற்கும் தகுதியற்றது. ஒருவர் தம் சிறுபிள்ளையிடம் ஏதேனும் வாக்களித்துவிட்டு அதை நிறைவேற்றாமல் இருக்கவேண்டாம். ஏனெனில் பொய் தீமைகளுக்கு வழிவகுக்கும். தீமைகள் நரகத்திற்கு வழிவகுக்கும்.

“உண்மை நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மை சொர்க்கத்துக்கு வழிகாட்டும். இதனால்தான் உண்மை பேசுபவரைக் குறித்து, அவர் ‘உண்மை சொன்னார்...நன்மை செய்தார்..’ என்று சொல்லப்படுகிறது. பொய்யனைப் பற்றி, ‘அவன் பொய்யுரைத்தான்..தீமை புரிந்தான்’ என்று கூறப்படுகிறது.” (ஆதாரம்: இப்னு மாஜா)

தொகுப்பு: சிராஜுல்ஹஸன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்