SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பதிர்பேணி

2020-03-02@ 12:38:39

தேவையான பொருட்கள்:

மைதா    - ஒரு கப்
சர்க்கரை    - ஒரு கப்
நெய்         - பொரிக்கத்
தேவையான அளவு
உப்பு -  ஒரு சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு

பதிர் போட:


நெய் இரண்டு ஸ்பூன் மற்றும் அரிசி மாவு இரண்டு ஸ்பூன் இரண்டையும் நன்கு கலந்து கொள்ளவும்.

செய்முறை:

மைதா மாவை பாத்திரத்தில் போட்டு சிறிது உப்பும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து  நன்கு கலந்து சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.அரை மணி நேரம் ஊற வைக்கவும்.பதிரை தயார் செய்து கொள்ள வேண்டும்.நன்கு நுரைத்து வரும் வரைக்கும் கலந்து கொள்ளவும்.அரை மணி நேரம் கழித்து சிறிய உருண்டைகளாக உருட்டி மெலிய சப்பாத்தி போல இட்டு கொண்டு பதிரை சப்பாத்தி மேல் தடவி இன்னுமொரு சப்பாத்தி வைத்து அதன் மேலும் தடவி ஒன்றாக சுருட்டி அரை விரல் அளவிற்கு கட் செய்து நடுவில் மடித்து சிறிய பூரி அளவு இட்டு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொரித்து எடுக்கவும். மற்றொரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு சர்க்கரை சேர்த்து கம்பி பதம் வந்ததும் அணைத்து விடவும்.பொரித்து வைத்துள்ளவற்றின் மீது சர்க்கரை பாகை விட்டு அதில் நன்கு ஊறிய பின் நிவேதிக்கவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ballon3

    பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

  • police3

    அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

  • mkstalin3

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

  • 03-06-2020

    03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • schoolopen3

    சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்