SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாமனை மடியேந்திய மகா கணபதி

2020-02-25@ 10:59:46

எர்ணாகுளம் - கோட்டயம் ரயில் பாதையில் குறுப்பந்தரா ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள மல்லியூர் மஹாகணபதி க்ஷேத்திரத்தில் பழமைமிக்க மல்லியூர் ஸ்ரீவைஷ்ணவ கணபதி ஆலயம் உள்ளது. சின்ன கிருஷ்ணனை தம் இடது தொடையில் இருத்தியவாறு அமர்ந்த நிலையிலும், தன் தும்பிக்கையை வளைத்து கிருஷ்ணனைத் தாலாட்டும் கோலத்திலும் விநாயகர் காட்சி தருகிறார். விநாயக சதுர்த்தி நாளில் இக்கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள், கஜபூஜை, அஷ்ட திரவியம் மகா யாகம், பாட்டுக் கச்சேரிகள் ஆகியவை நடைபெறுகின்றன. வேண்டிக் கொண்டு இந்த சிறப்பு பூஜைகள் செய்வோரும் உண்டு.

விநாயக சதுர்த்தி நாளன்று இவ்வாலயத்துக்கு லட்சக்கணக்கானோர் வருகை தருகின்றனர். ேமலும் திருமணத்தடை நீங்க 28 கதலிப் பழங்களாலான மாலை செவ்வாய்க்கிழமைகளில் (ஒரு வாரம்) சாத்தி செய்யும் வழிபாடு இத்தலத்தில் மிகவும் பிரதானமானது. இவ்வழிபாட்டுக்கு முன்பதிவு செய்து கொள்கின்றனர். மகர விளக்கு காலமான நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை வருடாந்திர கணேச சங்கீத உற்சவம் நடைபெறுகிறது. அப்பொழுது பிரபல பாடகர்கள் இங்கு வந்து அரங்கில் பாடி அர்ப்பணம் செய்கின்றனர். இசையால் இங்குள்ள ஸ்ரீவைஷ்ணவ கணபதியை வணங்குவது ஒரு பெரிய ஆசிர்வாதமாகக் கருதப்படுகிறது.

விநாயக சதுர்த்தி போன்றே கிருஷ்ண ஜெயந்தியும் இத்தலத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நோய் நீங்க காரியங்கள் சித்தி பெற, திருமணப்பேறு மற்றும் மகப்பேறு கிட்ட 12 வியாழக்கிழமைகளில் பால் பாயசம் செய்து வைஷ்ணவ கணபதிக்குப் படைக்கப்படுகிறது. உதயாஸ்தமன பூஜை, பழமாலை, சிறப்பு பூஜைகள் செய்து பலன் பெறலாம்.

பெண் தலையுடன் பிள்ளையார்

கோவை சூளூர் அருகே அப்பைய்ய நாயக்கன்பட்டி கிராமத்தில் பெண் தலை கொண்ட விநாயகரை தரிசிக்கலாம். இக்கோயிலில் ஆண்களுக்கு அனுமதி இல்லை. பெண்களே பூஜை செய்கின்றனர்.

பிள்ளையாருக்கு பாக்குப்பூ

கர்நாடகாவில் உடுப்பிக்கு அருகிலுள்ள ‘‘ஆனெகுட்டே’’ என்ற ஊரிலுள்ள பிள்ளையார் கோயில் மிகவும் பிரபலமானது. அங்குள்ள பிள்ளையாருக்கு கொத்துக் கொத்தாக ‘‘பாக்குப்பூ’’ சாற்றுகிறார்கள். அதையே பிரசாதமாக கொடுக்கிறார்கள். பெண்கள் அதை தலையில் அணிவது வழக்கமாக உள்ளது.

ஏழு கரங்களுடன் விநாயகர்!

தில்லைக் காளிக் கோயிலின் தெற்குப் பிராகாரத்தில் ஏழு திருக்கரங்களுடன் கூத்தாடும் விநாயகப் பெருமானின் திருக்கோலத்தைத் தரிசிக்கலாம். இது ஓர் அபூர்வ வடிவமாகும்.

கடன்தீரகணபதி மந்திரம்

கருங்காலி குச்சியால் கணபதி ஹோம் செய்ய எவ்வளவுபெரியளவில் கடன் இருந்தாலும் அது மிக விரைவாக தீர்ந்து விடும்.கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00க்குள் ஜபிப்பது மிக நன்று என கணேச உதத்ர தாயினி உபநிஷத்தில்கூறப்பட்டுள்ளது.

இதோ அந்த மந்திரம் : ‘‘ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹாஹே பார்வதி புத்ராருணம் நாசம் கரோதுமே ஸ்ரீம்ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸலபக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா ஸ்ரீசக்ரேசாயஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா.’’

தொகுப்பு: எஸ்.கிருஷ்ணஜா பாலாஜி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-05-2020

  22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்