SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிர்ஷ்ட தேவதைகளை வசியம் செய்து உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக வைத்துக் கொள்ள ரகசிய வழிபாடு

2020-02-24@ 10:05:18

மனிதர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். சிலருக்கு அந்த பிரச்சனைகள் சுலபமாக தீர்த்து விடும். சிலருக்கு சிறிய கஷ்டம் வந்தால்கூட அது பெரிய அளவிலான பாதிப்பைத் தந்துவிடும். இதற்கு ஒரு முக்கிய காரணம் விதி மட்டும்தான். விதி என்று நினைத்து கஷ்டங்களை நம் தலையில் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அந்த கஷ்டத்திற்காக தீர்வு என்ன என்பதை தேடுபவர்களுக்கு அதிர்ஷ்டமானது நிச்சயம் கை கொடுக்கும்.

பெரிய பெரிய கஷ்டங்களை எல்லாம் கூட சுலபமாக தீர்த்து வைக்கும் இந்த அதிர்ஷ்டத்தையும், அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் தேவதைகளையும் எப்படி நம் அருகிலேயே வைத்துக் கொள்வது? இதற்கான ஒரு சிறிய ரகசியத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே மாலை 6 மணி அளவில் மகாலட்சுமியேடன் மற்ற தேவதைகளும் வீதியில் வலம் வருவார்கள் என்று கூறுவது நம் ஐதீகம். இப்படி அவர்கள் உலாவரும் சமயத்தில் எந்த வீடு மங்களகரமாகவும், வாசனை நிறைந்ததாகவும் இருக்கின்றதோ அந்த வீட்டில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள் என்பதும் நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ள கூற்று.

இப்படி நம் கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும் இந்த மகாலட்சுமியுடன் சேர்ந்த அதிர்ஷ்ட தேவதைகளை எப்படி நம் வீட்டின் பக்கம் பார்க்க வைப்பது? வாசனை மிகுந்த பொருட்களை நம் வீட்டில் வைத்துக் கொள்வதன் மூலம் நிச்சயமாக இவர்களை நம்மால் வசியம் செய்து கொள்ள முடியும். இதனால் தினம் தோறும் மாலை வேளையில் ஒரு தீபத்துடன் சேர்த்து வாசனை மிகுந்த ஊதுவத்திகளை நம் வீட்டில் ஏற்றி வைத்தாலே போதும். அதன் பின்பு அதிர்ஷ்ட தேவதைகளை வசியம் செய்ய 1 வெற்றிலை, 5 கிராம்பு, 5 பச்சை கற்பூரமும் போதும்.

கட்டாயம் இந்த வெற்றிலையை உங்களது குலதெய்வத்தின் திருவுருவப் படத்திற்கு முன்பு வைத்து பூஜை செய்துவிட்டு பின்பு தான் பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டும். ‘உங்களது குலதெய்வத்திடம் என் குடும்பம் மகாலட்சுமியின் வரத்தைப் பெற்று என்றும் அதிஷ்டத்துடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்று நினைத்து வேண்டிக் கொள்வது மிகவும் நல்லது.’ முதலில் அந்த வெற்றிலையில் 5 கிராம்புகளை நன்றாக மடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

5 பச்சைக்கற்பூரங்களை ஏற்றிவைத்து அந்த நெருப்பில் தங்கத்துடன் சேர்த்து மடித்து வைத்த வெற்றிலையை போட்டு விடவும். நன்றாக எரிந்து சாம்பலான பின்பு அதை தினம் தோறும் மாலை 6 மணி அளவில் நெற்றியில் வைத்து வந்தால் எப்படிப்பட்ட அதிர்ஷ்ட தேவதையும், மகாலட்சுமியையும் நம் வீட்டிற்குள் வர வைத்து விடலாம். வீட்டில் இருக்கும் தலைவி இந்த பரிகாரத்தை செய்து நெற்றியில் சாம்பலை வைத்துக்கொண்டால் போதும். உங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டலட்சுமி நிச்சயம் வருகை தருவாள். இதுமட்டுமல்லாமல் உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு ஜாதகத்தில் ஏதாவது தடை இருந்தால் கூட, அதை நிவர்த்தி செய்யும் சக்தியானது இந்த சாம்பலுக்கு உண்டு.

திருமணத் தடை நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டின் வாஸ்து பிரச்சினை நீங்கும். தொழிலில் ஏதாவது முடக்கங்கள் இருந்தால் அது விரைவில் சரியாகி விடும். வேலையில் பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு. ஆரோக்கியத்தில் முன்னேற்றம். இப்படி எப்படிப்பட்ட பிரச்சனையையும் தீர்க்கும் ஒரு வசியம் இந்த சாம்பலுக்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். குடும்பத்தின் தலைவி, இந்த பரிகாரத்தை செய்து, சாம்பலை நெற்றியில் இட்டுக்கொண்டு, வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், அதை சரியாக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்