SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீட்டை கோவிலாக மாற்ற அம்மனை நினைத்து இந்த ஒரு விளக்கை ஏற்றினால் போதும்!

2020-02-22@ 09:45:52

நம்முடைய வீட்டை விட்டு வெளியே சென்று எந்த இடத்தில் தங்கி இருந்தாலும், அதில் நமக்கு மனத்திருப்தி என்பது இருக்கவே இருக்காது. சுற்றுலா செல்லும் சமயங்களில், ஹோட்டல் அறைகளில் தங்கினாலும், உறவினர்கள் வீட்டிற்கு சென்று தங்கினாலும், எவ்வளவுதான் குளிர்சாதன வசதி இருக்கும் அறைகளில் தங்கினாலும், சுகமாக இருந்தாலும், இவை எல்லாம் சேர்ந்து நமக்கு மனநிம்மதியை அளிக்காது. எப்போது நம் வீட்டிற்கு செல்ல போகின்றோமோ! என்ற ஒரு நினைப்பு நம் மனதிற்குள் தோன்றிக்கொண்டே இருக்கும். இதேபோல்தான் வெளியில் சென்று சுகபோக விருந்து உபச்சாரம், அமிர்தம் போன்ற சாப்பாடு இப்படி எவ்வளவு தான் இருந்தாலும் நம் வீட்டிற்கு வந்து ஒரு வாய் தண்ணீர் எப்போது குடிப்போம் என்ற எண்ணமும் நமக்கு தோன்றுவது இயற்கைதான்.

இப்படி நாம் எங்கு, எந்த சூழ்நிலையில், எப்படி இருந்தாலும் நம் வீட்டை பற்றிய நினைப்பு நமக்கு வந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட சிறப்புகளை உடையது தான் நம்முடைய வீடு. ஆனால் இப்படிப்பட்ட வீட்டை சிலர் ‘எதற்காகத்தான் இந்த வீட்டிற்குள் நுழைகிறோமோ’? என்று என்னும் அளவிற்கு வைத்திருப்பார்கள். சதாகாலமும் பிரச்சனை, சதாகாலமும் சண்டை சச்சரவு, மன நிம்மதியே இருக்காது. வீட்டில் ஏதோ பீடை பிடித்தது போன்ற ஒரு சூழல் இருக்கும். இந்தப் பிரச்சினையெல்லாம் கண் திருஷ்டி மூலமாகவோ, கெட்ட சக்தியின் மூலமாகவோ கூட இருக்கலாம். இதை தவிர்க்க நாம் ஒரு எளிய பரிகாரத்தை செய்தாலே போதும். அது என்ன பரிகாரம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மாலை நேரத்தில் நம்முடைய வீட்டு வாசலில் மஞ்சளில் கோலமிட்டு, அதன் மேல் வேப்ப இலைகளை வைத்து, வேப்ப இலைகளுக்கு மேல் பகுதியில் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கை வைத்து, பஞ்சு திரி போட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். நீங்கள் வைக்கப்படும் வேப்ப இலைகளின் நுனிகள் கிழக்கு வடக்கு பார்த்தவாறு வைத்துக் கொள்ள வேண்டும். விளக்கு கிழக்கு பக்கம் பார்த்தவாறு இருக்க வேண்டும். இப்படி தினம்தோறும் அம்மனை நினைத்து இந்த வழிபாட்டை செய்து வந்தால் நம் வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, வீடு லட்சுமி அம்சம் நிறைந்ததாக மாறும். உங்களது வீட்டிற்கு ஏதாவது கண்திருஷ்டி இருந்தாலும் அது படிப்படியாக குறையும். வீட்டில் உள்ளவர்களுக்கு தீராத உடல் உபாதை, மனகஷ்டம் எதுவாக இருந்தாலும் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரலாம்.

இத்தனை நாட்கள் தான் செய்ய வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. 48 நாட்கள் தொடர்ந்து ஏற்றி வந்தாலே நல்ல பலன் இருப்பதை நம்மால் உணர முடியும். இந்த பரிகார தோடு சேர்த்து எந்த அம்மனை மனதில் நினைத்து வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். மீனாட்சி அம்மனை வழிபட்டால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும். திருமணத்தடை உள்ளவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். காஞ்சி காமாட்சி அம்மனை வழிபட்டால் வீட்டில் தீராத கஷ்டங்கள் கூட விரைவாக ஒரு தீர்வுக்கு வந்துவிடும். இருக்கன்குடி மாரியம்மன் வழிபட்டால் உடல் உபாதைகள் தீரும்.

குறிப்பாக வயிற்று வலி, கை கால் வலி, கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த அம்மனை வழிபடுவது மிகவும் சிறந்தது. அமாவாசை பௌர்ணமி தினங்களில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அங்கு இருக்கும் புனித நீரில் நீராடி பின்பு அம்மனை வழிபட்டால் நாம் நினைத்த காரியம் வெற்றி அடையும். வெக்காளி அம்மனை வழிபடுவதன் மூலம் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும். குழந்தை வரம் வேண்டி இந்த அம்மனை மனதார நினைத்து வேண்டிக் கொண்டால் நல்ல பலன் உண்டு. வாராஹி அம்மனை பஞ்சமி திதியில் விரலி மஞ்சள் மாலை அணிவித்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும்.  வராஹி அம்மனை 16 முறை பிரதட்சணம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்